ஒரு வரலாற்று பயணத்தின் நாட்குறிப்பு…

‘சங்கர், கோகுல், இளவரசன் என எத்தனைஎத்தனை கொலைகளடா அத்தனை கொலையும் சாதியால் என்றால்சாதியை வெட்டி புதைத்திடடா’‘வீதியிலே சாலையிலே பயணம் வருகின்றோம் சாதி எனும் இழிவகற்ற தோழர்கள் வருகின்றோம்’வெண்புறாவின் வார்த்தைகள் கரிசல் கருணாநிதியின் குரலில் உயிர்பெற்று அழைக்கிறது. செம்படையின் கம்பீரத்தோடு கால்கள் விறைத்து பாதங்கள் முன்னேறுகின்றன. தார்ச்சாலைகளும், புழுதி படிந்த மண் சாலைகளும்பின்னோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இதோ சேலம் மாவட்ட எல்லையை கடப்பதற்கு சில கிலோ மீட்டர்களே எஞ்சியிருக்கின்றன.பாதுகாப்பிற்காக எங்களோடு வந்து கொண்டிருந்த காவல் ஆய்வாளருக்கு அலைபேசியில் … Read more

வாச்சாத்தி கொடூரமும் 25 ஆண்டுகள் போராட்டமும்:ஒரு கிராமத்தின் அழுகுரல்..!

முதன்முதலில் வாச்சாத்தி கிராமத்துக்கு நாங்கள் சென்றது 1992, ஜுலை 14 அன்று. 25 ஆண்டுகள் முடிவடைந்திருக்கின்றன! பேச்சில்லாத கிராமமாகத்தான் அப்போது இருந்தது வாச்சாத்தி. வருவாய்த் துறை ஆவணங்களில் மனிதர்கள் வாழாத கிராமத்தை இப்படித்தான் குறிப்பிட்டிருப்பார்களாம். ஆம்! எந்த ஜீவராசிகளும் அந்த ஊரில் இல்லை. எல்லாம் அழிக்கப்பட்டிருந்தன. வீடு, வீட்டில் இருந்த பொருட்கள், வளர்த்த ஆடு, மாடு, கோழி, நாய்கள் என எல்லாம்! மனிதர்கள்? சிக்கியவர்கள் சிறையில், மற்றவர்கள் மலையில்! தண்ணீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு அசுத்தப்படுத்தப்பட்டிருந்தது. இப்படி … Read more

காமராஜர் தி கிங் மேக்கர்…………!

ஜூலை 15: காமராஜர் பிறந்தநாள் நீட் தேர்வு தொடர்பாகக் கல்வியாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இன்றைய சூழலில் காமராஜர் முதல்வராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று கேட்டேன். “படிச்சு முடிச்சப்புறம்தானே போட்டி? படிக்கப்போறதுக்கு முன்னாடியே எதுக்குப் போட்டின்னேன். நம்ம பசங்க படிக்கிறதுக்கு இத்தனை தடை எதுக்குன்னேன். உடனே டெல்லிக்கு ஃபோனைப் போடு” என்று சொல்லியிருப்பார் என்றார் அவர். மக்களுக்குப் பயன்படத்தான் சட்டம்; சட்டத்துக்காக மக்கள் அல்ல என்ற கொள்கையுடன் இயங்கிய காமராஜர் நிச்சயம் அதைத்தான் செய்திருப்பார். நேருவின் ஆட்சியில் … Read more

உழைக்கும் மக்களின் ஒப்பற்ற தலைவன் …………தோழர் சங்கரய்யா

நாட்டின் சுதந்திரத்துக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடி, எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, எண்பது ஆண்டுகளாக மக்கள் பணி செய்துகொண்டு, இன்றைக்கும் எளிய வாழ்க்கை வாழ்ந்துவருகிறார் தோழர் சங்கரய்யா! ஜூலை மாதம் 15 அன்று அவருக்கு 95 வயது முடிந்து, 96 வது பிறந்த நாள்! கோவில்பட்டியில் வசதியான குடும்பத்தில் நரசிம்மலு – ராமானுஜம் இணையருக்கு இரண்டாவது மகனாக, 1922-ல் சங்கரய்யா பிறந்தார். அவரது தாய்வழிப் பாட்டனார் ராமசாமி, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். ‘குடியரசு’ இதழின் … Read more

கம்யூனிசம் என்றால் என்ன?

நாட்டில் இருக்கும் பல ஓட்டுக்கட்சிகளை போல அதுவும் ஒரு ஓட்டுக்கட்சி. உலகில் இருக்கும் பல கொள்கைகளை போல அதுவும் ஒரு கொள்கை. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகியல் பார்வை. முதலாளித்துவத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை. இப்படி பலவாறான மதிப்பீடுகள் கம்யூனிசத்தைப் பற்றி மக்களிடம் இருக்கிறது. ஆனால் கம்யூனிசம் என்பது ஒரு இயல்பு. மனிதர்களின் இயல்பான ஒரு உணர்வு. சாலையில் நடந்து செல்லும் ஒருவர் அங்கு ஒருவன் மற்றொருவனை அடித்து உதைத்துக்கொண்டிருப்பதை கண்டால், பாதிக்கப்பட்டவனின் சார்பில் பாதிப்பவனை … Read more