மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காதலர்கள் சடலமாக மீட்பு…!

இராஜஸ்தானை சேர்ந்த காதலர்கள் இருவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேர் எனும் மாவட்டத்தில் நேற்று திருமணமாகாத இளம் காதல் ஜோடிகள் இருவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருவரும் சுமார் 23 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் அவர்கள், புக்ராஜ் நாயக் மற்றும் லீலா நாயக் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசா ரணையில் இருவரும் காதலித்து … Read more

ராஜஸ்தானில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் – 4.8 ரிக்டராக பதிவு!

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவு என தேசிய புவியியல் மையம் தகவல். ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர் நிலநடுக்கத்தால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை 7.42 மணியளவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, பிகானிரியில் நேற்று அதிகாலை 5:24 மணிக்கு ஏற்பட்ட … Read more

ராஜஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம்…!

ராஜஸ்தானில் இன்று அதிகாலை 5.24 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் இன்று அதிகாலை 5:24 மணிக்கு ரிக்டர் அளவில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் எந்தவிதமான சேதமும் ஏற்பட்டதாக எந்த தகவல் வெளியாகவில்லை என்றாலும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் நிர்வாக தேர்வில் வெற்றி பெற்ற விவசாயியின் 5 மகள்கள்..!

ராஜஸ்தான் நிர்வாக தேர்வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் வெற்றி பெற்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.  கடந்த 2018 ஆம் ஆண்டில் நடந்த ராஜஸ்தான் பொது சேவை மையம் மற்றும் ராஜஸ்தான் நிர்வாக சேவை மையம் தேர்வில் வெற்றி பெற்று, நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களை அதிகாரபூர்வ இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. இதில் ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியை சேர்ந்த விவசாயியின் மகள்கள் தேர்வாகியுள்ளனர். இவரின் பெயர் ஸ்ரீ சஹதேவ் சஹாரன். இவருக்கு 5 மகள்கள். இதில் … Read more

காய்கறி விற்பது போல் பாகிஸ்தானுக்கு உளவு – ஒருவரை கைது செய்த டெல்லி காவல்துறை!!

ராஜஸ்தான் ராணுவ முகாமில் காய்கறி விற்பது போல் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த நபரை கைது செய்த டெல்லி காவல்துறை. ராஜஸ்தானில் உள்ள போக்ரான் ராணுவ தள முகாமில் காய்கறிகளை விநியோகித்து வந்த ஹபீப் கான் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை பாகிஸ்தானின் உளவு நிறுவனமான இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ)க்கு கசிய விட்டதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் ராஜஸ்தானில் பிகானேரில் வசிக்கும் ஹபீப் கான் என அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கின்றன. … Read more

ராஜஸ்தானில் பரவிய கப்பா வைரஸ்..11 பேருக்கு தொற்று உறுதி..!

ராஜஸ்தான் மாநிலத்தில் உருமாறிய கொரோனோவான கப்பா வைரஸ் 11 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வூஹான் பகுதியில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பல்வேறு உயிர்சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது இந்த கொரோனா வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா, லாம்டா, கப்பா என பல வகைகளில் உருமாற்றம் அடைந்துள்ளது. இந்தியாவில் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுகள் பரவி வரும் நிலையில் கப்பா வைரஸ்-ம் பரவ ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே … Read more

40 விநாடிக்குள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி – ராஜஸ்தான் பெண்மணி!

இராஜஸ்தானை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு 40 விநாடிகளில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு தடுப்பூசி போடுவது ஒன்றே தீர்வு என மக்கள் தற்பொழுது விழிப்புணர்வு அடைந்துள்ள நிலையில், பலரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் தடுப்பூசி போட கூடிய மக்கள் பல நேரங்களில் தடுப்பூசி போடும் ஊழியர்களின் அலட்சியத்தால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. சிலருக்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்த அடுத்த … Read more

ஏற்கனவே திருமணமானவர் திருமணமாகாதவர் உடன் இணைந்து வாழ அனுமதிக்க முடியாது – ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்!

ஏற்கனவே திருமணம் ஆனவர் திருமணமாகாத ஒருவருடன் இணைந்து வாழ முடியாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் கருத்து. ராஜஸ்தானை சேர்ந்த ஹேமந்த் சிங் ரத்தோர் என்பவர் திருமணமாகாத ஒரு இளம் பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் ஹேமந்த் ஏற்கனவே திருமணமாகியாவர். இந்நிலையில் தங்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராஜஸ்தான் உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் அவருக்கு பாதுகாப்பு வழங்க … Read more

ராஜஸ்தானில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து…!

ராஜஸ்தான் அரசு அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ  பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ 12ம் … Read more

பழிக்குப் பழி;இரண்டு மர்ம நபர்களால் 5 முறை சுட்டுக்கொல்லப்பட்ட டாக்டர் தம்பதியினர்…!

ராஜஸ்தானின்,பரத்பூர் அருகே காரில் சென்ற டாக்டர் தம்பதியினர், இரண்டு மர்ம நபர்களால் 5 முறை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் வசிக்கும் டாக்டர் சுதீப் குப்தா மற்றும் அவரது மனைவி டாக்டர் சீமா குப்தா ஆகிய இருவரும் தீபா என்ற 25 வயது பெண் மற்றும் அவரது 6 வயது மகன் ஆகியோரைக் கொன்ற வழக்கில் 2019 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர்.அதன்பின்னர்,தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில்,டாக்டர் சுதீப் குப்தா மற்றும் … Read more