45 நாட்களில் வேலை.. 6000 அங்கன்வாடி பணியிடங்கள்.! பஞ்சாப் முதல்வரின் அதிரடி அறிவிப்பு.!

பஞ்சாபில் 6000 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் இன்னும் 45 நாட்களில் நிரப்பப்படும் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.  டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி சார்பில் முதல்வராக பகவந்த் மான் தீவிரமாக பணியாற்றி வருகிறார். பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இதில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் காலிப்பணியிடங்களை வேகமான நிரப்ப முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதன்படி , பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 6000 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் இன்னும் 45 நாட்களில் … Read more

குப்பை கொட்டியதால் வந்த வினை… முதலமைச்சர் வீட்டுக்கு 10,000 ரூபாய் அபராதம்.!

அனுமதியின்றி, விதிகள் மீறி குப்பை கொட்டப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, பஞ்சாப் முதல்வர் வீட்டிற்கு அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.   பஞ்சாப் மாநிலத்தின் அண்மையில் முதல்வராக பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பக்வந் சிங், வீடு பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகரில் உள்ளது. இந்த வீட்டில் , அனுமதி இன்றி குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து, வந்த சண்டிகர் நகர் முனிசிபாலிட்டி அதிகாரிகள், ஆய்வு செய்து 10 … Read more

சித்து மூஸ்வாலா கொலை… துப்பாக்கிசூட்டில் இருவரை சுட்டுக்கொன்ற பஞ்சாப் போலீஸ்!

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் துப்பாக்கிசூட்டில் சுட்டுக்கொலை. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடைய இரண்டு பேர் அம்மாநில போலீசால் சுட்டு கொல்லப்பட்டனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம்  29-ம் தேதி மன்சா மாவட்டத்தில் உள்ள மூஸா என்ற கிராமத்தில் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பஞ்சாப் அரசியலில் … Read more

காங்.கட்சியின் முக்கிய பிரமுகர் கொடூரமாக சுட்டுக்கொலை – கனடா கேங் பொறுப்பா? – டிஜிபி சொன்ன முக்கிய தகவல்..!

பஞ்சாபி பாடகரும்,காங்கிரஸ் தலைவருமான சித்து மூஸ்வாலா மான்சா மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முதல்வர் பக்வந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசு மூஸ்வாலா மற்றும் 424 பேரின் பாதுகாப்பை வாபஸ் பெற்ற ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மூஸ்வாலா மற்றும் அவரது நண்பர்கள் இருவர் பஞ்சாபில் உள்ள தங்கள் கிராமமான மான்சாவுக்கு காரில் சென்று கொண்டிருந்த போது,அவரது காரை வழிமறித்த அடையாளம் தெரியாத … Read more

#Breaking:சற்று முன்…சுகாதாரத்துறை அமைச்சரை திடீர் பதவி நீக்கம் செய்த பஞ்சாப் முதல்வர்!

பஞ்சாப் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லாவை, அம்மாநில முதல்வர் பகவந்த் மான் பதவி நீக்கம் செய்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லா அரசு ஒப்பந்தங்களுக்கு அதிகாரிகளிடம் 1% கமிஷன் கோரியதாக கூறப்படும் நிலையில்,அவர் மீதான ஊழல் புகார் உறுதியானது. இந்நிலையில்,தற்போது  சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லாவை பதவி நீக்கம் செய்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். Punjab CM Bhagwant Mann sacks state’s Health Minister Vijay Singla following … Read more

ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை.. சித்துவின் கோரிக்கை நிராகரிப்பு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சரணடைய சில வாரங்கள் அவகாசம் கேட்டு நவ்ஜோத் சிங் சித்து கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். கடந்த 1988-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி பஞ்சாப்பின் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே ஜீப்பை சாலையில் நிறுத்தியதாக ஏற்பட்ட மோதலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, குர்னாம் சிங் என்ற நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்கப்பட்ட நபர் பின்னர் இறந்துவிட்டார். இதனால் அப்போது, சித்து மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 1999 … Read more

பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கட்சியில் இருந்து விலகல்!

பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் கட்சியில் இருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப்பின் முன்னாள் தலைவருமான சுனில் ஜாகர், முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை விமர்சித்ததற்காக தலைமையால் ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பேஸ்புக் நேரலையில் பேசிய சுனில் ஜாகர், காங்கிரஸுக்கு Goodbye and good luck என கூறி, தனக்கு எதிரான நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய கட்சியை சேர்ந்தவர்களை … Read more

பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சிதைந்து கொண்டே வருகிறது – ஆம் ஆத்மியை குறிவைக்கும் காங்கிரஸ்…!

பஞ்சாப் மாநிலத்தில் முன்னதாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து அம்மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் அவர்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலிஸ்தான் நிறுவன நாளை ஒட்டி கடந்த மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினரால் சீக்கிய கொடியேற்றப்பட்டு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிவசேனா அமைப்பினர் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். … Read more

கடும் மோதலின் எதிரொலி – பாட்டியாலாவில் இணைய சேவை நிறுத்தம்!

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பாட்டியாலாவில் இன்று இணைய சேவை முடக்கம். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள காளி மந்திர் அருகே இரு பிரிவினர் இடையே நேற்று கடுமையான மோதல் ஏற்பட்டது. அதாவது, காலிஸ்தான் ஆதரவு அமைப்பான சீக்கியர்களின் குரு பத்வந்த் சிங் பண்ணு, நேற்று காலிஸ்தான் நிறுவன நாளையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலிஸ்தானி கொடி ஏற்றும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏராளமான காலிஸ்தானி ஆதரவு அமைப்பினர் … Read more

பஞ்சாப் : தீப்பிடித்து எரிந்த பேருந்துகள் – ட்ரைவர் ஒருவர் உயிரிழப்பு..!

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பக்தா பாய் கா  மாவட்டத்தில் உள்ள மூன்று பேருந்துகள் தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தின் போது, பேருந்திற்குள் நடத்துனர் குரு தேவ் சிங் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். மேலும், இருவரும் மற்ற பேருந்திற்குள் காவலுக்காக நின்று கொண்டிருந்துள்ளனர். தீ எரிய ஆரம்பித்ததும் அவர்கள் இருவரும் லாவகமாக குதித்து உயிர் தப்பியுள்ளார். உள்ளே தூங்கிக்கொண்டிருந்த குறு தேவ் சிங் பரிதமாக கருகி உயிரிழந்துள்ளார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் … Read more