பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கட்சியில் இருந்து விலகல்!

பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் கட்சியில் இருந்து விலகினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப்பின் முன்னாள் தலைவருமான சுனில் ஜாகர், முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை விமர்சித்ததற்காக தலைமையால் ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பேஸ்புக் நேரலையில் பேசிய சுனில் ஜாகர், காங்கிரஸுக்கு Goodbye and good luck என கூறி, தனக்கு எதிரான நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய கட்சியை சேர்ந்தவர்களை கடுமையாக விமர்சித்தார். பாஜக கட்சியை எதிர்த்துப் போராடும் வகையில், காங்கிரஸ் தலைமை ஈடுபட்டு வரும் நிலையில், இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், காங்கிரஸின் ஒழுங்கு நடவடிக்கை குழு, ஜாக்கரை கட்சியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குமாறு பரிந்துரைத்தது. கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியிடம் தோல்வியடைந்த பின்னர், முன்னாள் முதல்வர் சன்னியை விமர்சித்து, கட்சிக்கு அவரே பொறுப்பு என்று கூறினார். சன்னியை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்ததற்காக கட்சித் தலைமையையும் ஜாகர் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here