பஞ்சாப்பில் இன்று விடுமுறை அறிவித்தது அம்மாநில அரசு. பஞ்சாப் மாநிலத்தில் இன்று (டிசம்பர் 28) விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள், வாரியங்கள்/கார்ப்பரேசன்கள், வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குரு கோவிந்த் சிங்கின் தாய் மற்றும் இரண்டு இளைய மகன்களின் தியாகத்தை நினைவுகூரும் ஃபதேகர் சாஹிப்பில் மூன்று நாள் ஷஹீதி ஜோர் மேளாவை குறிக்கும் வகையில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி மதுபானங்களை கண்டறிய, அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட மதுபானங்களில் QR கோடு ஒன்று பதிக்கப்பட்டு இருக்கும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநில அரசு தற்போது சிட்டிசன் செயலி (CITIZEN APP) மூலம் போலி மதுபானங்களை கண்டறியும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட மதுபானங்களில் QR கோடு ஒன்று பதிக்கப்பட்டு இருக்கும். அந்த QR கோடை சிட்டிசன் செயலி மூலம் ஸ்கேன் செய்து பார்த்தல் அதன் உண்மை தன்மை தெரிந்து விடும். இதன் மூலம் பஞ்சாபில் உலவும் […]
பஞ்சாபில் ஜனவரி 21ஆம் தேதி வரை பள்ளிகள் காலை 10 மணிக்கு திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக பஞ்சாபில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்ஜனவரி 21 வரை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, வழக்கமான நேரத்தில் மூடப்படும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இன்று மாநிலத்தின் பல பகுதிகளில் அடர்த்தியான மூடுபனியால் பார்வைத் திறன் பாதிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த […]
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் ஓடும் ஆட்டோவில் செவிலியரை இருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். இதிலிருந்து தப்பிக்க அவர் ஆட்டோவில் இறுத்து குதித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் செவிலியரை ஆட்டோவில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது. அதிலிருந்து தப்பிக்க அந்த செவிலியர் ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் செவிலியர் ஒருவர் ஆட்டோவில் மருத்துவமனைக்கு வேலைக்கு செல்கையில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது கூட்டாளி பாலியல் பலத்காரம் செய்ய முயன்றுள்ளார். பாலியல் […]
தேர்தலில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி தரவேண்டும் என பஞ்சாப் முதல்வர் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் தேர்தலை ஒட்டி ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்து பிரச்சரம் செய்வதற்காக பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுவருகிறார். இந்த வேளையில், இன்று காலை, பாட்டியாலா புறவழிச்சாலையில் போராட்டக்காரர்கள் திரண்டு, பேரணியாக பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் இருக்கும் முதலமைச்சரின் வீட்டை நோக்கி செல்லஆரம்பித்தனர். போராட்டக்காரர்கள், ஆம் ஆத்மி தேர்தலின் போது […]
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ரயில் நிலையத்தில் சூட்கேஸுக்குள் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ரயில் நிலையத்திற்கு வெளியே சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில், ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த சூட்கேஸ் குறித்து அந்த வழியாக சென்ற ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அந்த சூட்கேஸில் சடலம் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக அரசு ரயில்வே காவல்துறையின் ஏசிபி கூறுகையில், ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை நாங்கள் […]
சிவசேனா தலைவர் சுதிர் சூரி என்பவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தார்ஸில் சுட்டு கொல்லப்பட்டார். சிவசேனா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சுதிர் சூரி, இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தார்ஸில், கோபால் மந்திர் எனும் இடத்தில் ஓர் கோவிலுக்கு எதிரே போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் போது துப்பாக்கியால் சுடப்பட்டார். சுடப்பட்டு காயமடைந்த சுதிர் சூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டார். இவரை சுட்ட சந்தீப் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் […]
புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில் டெல்லி மற்றும் பஞ்சாபில் 35 இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக, சிபிஐ தரப்பில் ஏற்கனவே அவருக்கு நெருக்கமான இடங்களில் சோதனை நடைபெற்று, மணீஷ் சிசோடியா உட்பட […]
நேற்று ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் சட்டமன்றத்தில் முதல்வர் பக்வந்த் மான் தலைமையிலான அரசு தங்களது 92 எம்.எல்.ஏக்கள் மூலம் தங்கள் பெரும்பான்மையினை நிரூபித்தார். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கிறது. பக்வந்த் மான் அம்மாநில முதல்வர் பதவியில் இருக்கிறார். அம்மாநிலத்தில், பாஜக ‘ஆபரேஷன் தாமரை’ எனும் பெயரில் எம்.எல்.ஏக்களை விலை பேசுகிறது. ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டுகிறது என பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆம் ஆத்மி முன்வைத்தது. மேலும், இது குறித்து, பஞ்சாப் சட்டமன்றத்தில் நம்பிக்கை […]
பஞ்சாப் பேராசிரியர் குடிபோதையில் கல்லூரிக்கு சென்று வகுப்பறையில் பாடி ஆடும் வீடியோ இணையத்தில் வரலானது. குருநானக் தேவ் பல்கலைக்கழக கணித பேராசிரியர் குடிபோதையில் வகுப்பறையில் தோன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், கல்லூரியில் கணித பேராசிரியராக பணியாற்றும் ரவீந்தர் குமார் வகுப்பறையில், ஒரு பாட்டிலை வைத்துக்கொண்டு பஞ்சாபி மொழியில் தனது மாணவர்களுடன் பேசுவதும், பின் பாட்டு பாடி நடனமாடுவதும் பதிவாகியுள்ளது. மேலும் அதில் மாணவர்கள் பேராசிரியரை உற்ச்சாகப்படுத்தும் சத்தமும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை ரஜ்னி […]
பஞ்சாப் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரண் ரிஜிஜு, பாஜக தலைவர் சுனில் ஜாகர் மற்றும் பாஜக பஞ்சாப் தலைவர் அஸ்வனி சர்மா ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து, தனது கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸை-யும் (பிஎல்சி) பாஜகவுடன் இணைத்துள்ளார் கேப்டன் அமரீந்தர் சிங். நாட்டின் சரியான […]
பஞ்சாபில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான அரசு மீது செப். 22ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி மத்தியில் ஆளும் பாஜக, ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் எம்எல்ஏக்களை பேரம் பேசுவதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். பாஜக இந்தக் […]
சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் செப்டம்பர் 24ம் தேதி வரை ஒரு வாரம் விடுமுறை என அறிவிப்பு. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகள் நேற்று முன்தினம், தங்களை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக கூறி, போராட்டம் நடத்தினர். மாணவிகளின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் கசிந்த விவகாரம் தொடர்பாக சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்களின் பெரும் போராட்டங்களைத் தொடர்ந்து, வீடியோக்களை பகிர்ந்ததாகக் கூறப்படும் 23 வயது சிம்லா இளைஞன் உள்ளிட்ட […]
அமிர்தசரஸ் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தியை பரப்பிய 9ஆம் வகுப்பு 3 மாணவர்கள். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள டிஏவி பப்ளிக் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வதந்தியை 9 ஆம் வகுப்பு மாணவர்கள் மூவர் பரப்பியதாக போலீசார் தெரிவித்தனர். வதந்திகள் கண்டுபிடிக்கப்பட்ட சில மணிநேரங்களில் அந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வதந்தி பரவிய நிலையில், அதே பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்துவது தொடர்பான மற்றொரு வதந்தி வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பஞ்சாபில் 50 பேருடன் கார்னிவல் ராட்டினம் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது, 15 பேர் காயம். பஞ்சாபின் மொஹாலியில் நேற்று(செப் 4) நடந்த கண்காட்சியின் போது ஏறக்குறைய 50 பேருடன் இருந்த ராட்டினம் உடைந்து 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் குறைந்தது 15 பேர், பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த ராட்டினத்தின் […]
பஞ்சாபில் 1.45 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. பஞ்சாபின் கலால் துறையினர் வெள்ளிக்கிழமை(செப் 2) லூதியானாவில் ஆற்றங்கரைக்கு வெளியே ஒரு இடத்தில் கள்ளச்சாராயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 1.45 லட்சம் லிட்டர் லஹான் என்ற மூலப்பொருளை மீட்டு அழித்தனர். மாநில அமைச்சரான ஹர்பால் சிங் சீமா கூறுகையில், “மது மாஃபியாவின் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இதில் தொடர்புடைய யாரும் தப்பிக்க மாட்டார்கள்” என்று கூறினார். சட்டவிரோதமாக யாராவது கள்ள சாராயம் தயாரிக்கிறார்களா என […]
ஒரு எம்எல்ஏ-ஒரு ஓய்வூதியம் மசோதாவுக்கு பஞ்சாப் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. “ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்” மசோதாவுக்கு பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்” மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதை பஞ்சாபியர்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் பொதுமக்களின் வரிப்பணம் பெருமளவு மிச்சமாகும் என […]
பஞ்சாபில் 6000 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் இன்னும் 45 நாட்களில் நிரப்பப்படும் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி சார்பில் முதல்வராக பகவந்த் மான் தீவிரமாக பணியாற்றி வருகிறார். பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இதில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் காலிப்பணியிடங்களை வேகமான நிரப்ப முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதன்படி , பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 6000 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் இன்னும் 45 நாட்களில் […]
அனுமதியின்றி, விதிகள் மீறி குப்பை கொட்டப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, பஞ்சாப் முதல்வர் வீட்டிற்கு அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் அண்மையில் முதல்வராக பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பக்வந் சிங், வீடு பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகரில் உள்ளது. இந்த வீட்டில் , அனுமதி இன்றி குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து, வந்த சண்டிகர் நகர் முனிசிபாலிட்டி அதிகாரிகள், ஆய்வு செய்து 10 […]
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் துப்பாக்கிசூட்டில் சுட்டுக்கொலை. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடைய இரண்டு பேர் அம்மாநில போலீசால் சுட்டு கொல்லப்பட்டனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் 29-ம் தேதி மன்சா மாவட்டத்தில் உள்ள மூஸா என்ற கிராமத்தில் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பஞ்சாப் அரசியலில் […]