மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – பொன்.ராதாகிருஷ்ணன்

என்னுடைய தந்தை குறித்து மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியுள்ளார் என்று பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றசாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், சரக்கு பெட்டகம் மாற்றுமுனையம் வராது என அறிவித்தும், திமுகவினர் மக்களிடையே போராட்டத்தை தூண்டிவிடுகின்றனர். கன்னியாகுமரி தொகுதியை பற்றி ஸ்டாலினுக்கு என தெரியும்? என தொகுதி மக்களுக்கு எதும் செய்யவில்லை என ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். நெல்லை எங்கள் எல்லை, குமாரி எங்கள் தொல்லை என்று கூறியது திமுக. பொன்.ராதாகிருஷ்ணன் … Read more

கைகுலுக்கி வணக்கம் தெரிவித்துக் கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த்..!

பொன்.ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பரஸ்பரம் கைகுலுக்கி வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலும் ஒரே நாளில் நடைபெறுகிறது. இந்நிலையில், தற்போது இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் என்பதால் வேட்புமனு தாக்கல் விறுவிவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரவிருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டிடவுள்ளனர். இந்நிலையில், … Read more

கன்னியாகுமரி இடைத்தேர்தல்.. பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்..!

இன்று பொன்.ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ் எம்.பி எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாகவுள்ளது. அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுடன் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியையும் ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பாஜக. சார்பில் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டது. … Read more

#BREAKING: குமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி-பாஜக அறிவிப்பு ..!

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. நேற்று அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் இதுவரை பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே போட்டியிட்டுள்ளார். இதில் 7 முறை போட்டியிட்டு 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 5 முறை … Read more

விவசாயிகளை கொன்றது திமுக தான் – பொன்.ராதாகிருஷ்ணன்

அதிமுகவின் திட்டத்தை யாரோ வெளியிடுகிறார்கள், அதனால் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணனிடம், நான் சொல்வதை எல்லாம் முதல்வர் பழனிசாமி செய்து வருவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றசாட்டிக்கிறார் என்ற கேள்விக்கு, அப்போ அதிமுகவும், அரசாங்கமும் கவனமாக இருக்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளார். அதிமுகவின் திட்டத்தை யாரோ வெளியிடுகிறார்கள், அதனால் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் … Read more

#BREAKING: தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி மாறலாம்.. பொன் ராதாகிருஷ்ணன்..!

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இப்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி எனவும் , எதிர்காலத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமையலாம் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் 2021சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி அமையும் என அவர் தெரிவித்தார். இப்போது வைக்கப்பட்டுள்ள கூட்டணி பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி, சட்டமன்றத்துக்கு கூட்டணி அமைக்கப்படும். அது அதிமுகவுடன் இருக்கலாம், … Read more

புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி – பொன் .ராதாகிருஷ்ணன்

புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி என்று பொன் .ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது.இதனிடையே தான் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில், பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று … Read more

பேராசிரியர் அன்பழகன் மறைவு – பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இந்நிலையில் அன்பழகன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். தெரிவிப்பதுடன் அவரது பிரிவைத் தாங்கும் மனவலிமையை தந்திட எல்லாம்வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன். — Pon Radhakrishnan (@PonnaarrBJP) March 7, 2020 அவரது பதிவில், திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் … Read more

தனிப்பட்ட முறையில் நடிகர் விஜய்யை நான் நேசிக்கிறேன்.! முன்னாள் மத்திய அமைச்சர் பேட்டி.!

விஜய் படங்களை நானே ரசித்து பார்த்திருக்கிறேன் என்றும், தனிப்பட்ட முறையில் நடிகர் விஜய்யை நான் நேசிக்கிறேன். அப்படி இருக்கும்போது அவரை நான் எப்படி வெறுக்க முடியும் என பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கோவையில் 1998-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது … Read more

விமர்சிக்க விரும்வில்லை,கூட்டணி தர்மத்திற்காக அமைதியாக இருக்கிறேன்..!பொன்ராதாகிருஷ்ணன்

அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  கூட்டணி தர்மத்திற்காக அமைச்சர் ஜெயகுமாரை விமர்சிக்க விரும்வில்லை என்று  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் புதிதாக  மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக கடந்த 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் … Read more