அயோத்தி ராமர் கோயில்.! அழைப்பை ஏற்றுக்கொண்டார் பிரதமர் மோடி.!

PM Modi

உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்கு ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அமைப்பு  சார்பில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த கட்டுமான பணிகள் இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. வரும் 2024 ஜனவரி மாதம் 22ஆம் தேதி இதன் திறப்பு விழா … Read more

37 வது தேசிய விளையாட்டுப் போட்டி..! நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!

PMModiNDA MeetDelhi

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 26ம் தேதி) மகாராஷ்டிரா மற்றும் கோவாவுக்கு செல்கிறார். பிற்பகல் மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்குச் செல்லும் பிரதமர் மோடி, கோயிலில் பூஜை மற்றும் தரிசனம் செய்வார். பிறகு ஷீரடியில் உள்ள புதிய தரிசன வரிசை வளாகத்தையும் அவர் திறந்து வைக்கிறார். இந்த புதிய தரிசன வரிசை வளாகத்திற்கு கடந்த 2018 அக்டோபரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த தரிசன வரிசை வளாகம் பக்தர்களுக்கு … Read more

காங்கிரஸ் மீது பழிபோடும் பாஜக அரசின் முகமூடி கிழிந்துள்ளது.! சு.வெங்கடேசன் விமர்சனம்.! 

CPM MP Su Venkatesan

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வாரா கடன் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் அறிந்து அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். வாரா கடன் என்பது மத்திய அரசு சார்பில் , பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையாகும். அது முறையான கால இடைவெளியில் வசூல் செய்யப்பட வேண்டும். இது குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் … Read more

100 நாள் வேலைத்திட்டத் தொழிலாளர்களுக்கு இந்த தீபாவளி, கருப்பு தீபாவளி.! காங்கிரஸ் எம்பி குற்றசாட்டு.!

Congress MP Manickam Thagore

இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் கிராமபுற மக்களுக்கு உடலுழைப்பு வேலை திட்டம் தொடர்ந்து 100 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டமானது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தான் தமிழக்த்தில் ஊழியர்களுக்கு தினசரி சம்பளம் 281 ரூபாயில் இருந்து 294 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதே போல மாற மாநிலங்களில் குறிப்பிட்ட தொகை உயர்த்தப்பட்டது. அதே வேளையில், கடந்த 2022 – 2023 … Read more

சிறந்த நிர்வாகி அமித்ஷா ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்… பிரதமர் மோடி பதிவு.!

PM Modi - Union Minister Amit shah

1980களில் இந்துத்துவா அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கமான RSS பிரிவில் தன்னை இணைத்து கொண்டு, அதன் பிறகு பாஜகவில் பல்வேறு அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை நிர்வகித்து, 1989இல் அகமதாபாத் பாஜக நகர செயலாளராக பொறுப்பேற்றார் அமித் ஷா. அதன் பிறகு 1997இல் குஜராத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதன் முதலாக எம்எல்ஏ ஆனவர் அமித்ஷா. இதுவரை 4 முறை எம்எல்ஏவாகவும், அடுத்து குஜராத் மாநில முதல்வராக பிரதமர் நரேந்திர மோடி இருந்த போது பல்வேறு துறைக … Read more

”நமோ பாரத்” ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

Namo Bharat

இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக ட்ரான்சிட் ”நமோ பாரத்” ரயிலை பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். உத்தரபிரதேசத்தின் சாஹிபாபாத் ரேபிட்எக்ஸ் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, அந்த ரயிலில் பிரதமர் மோடி பயணித்தார். அப்போது பள்ளி மாணவர்கள் உள்பட ரயிலில் பயணித்தவர்களிடம் அவர் கலந்துரையாடினார் பிரதமர் மோடியால் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள பிராந்திய விரைவு போக்குவரத்து சேவையான, அதிவேக மெட்ரோ ரயில்களுக்கு ‘நமோ பாரத்’ என … Read more

“நமோ பாரத்”.. அதிவேக ட்ரான்சிட் ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

NaMo Bharat

இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக ட்ரான்சிட் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடியால் இன்று துவங்கப்படும் பிராந்திய விரைவு போக்குவரத்து சேவையான, அதிவேக மெட்ரோ ரயில்களுக்கு, ‘நமோ பாரத்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறையில் சமீப காலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிது புதிதாக ரயில்வே துறையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அப்படி அறிமுகப்படுத்தியது தான் வந்தே பாரத் ரயில் சேவையாகும். வந்தே … Read more

2040க்குள் சந்திரனுக்கு இந்தியரை அனுப்ப வேண்டும்.! பிரதமர் மோடி அறிவுறுத்தல்.!

PM Modi meeting with ISRO

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், நிலவில் தடம் பதித்த சந்திராயன்-3 மற்றும் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 ஆகிய இரண்டு திட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது . இதனை அடுத்து தங்கள் அடுத்தகட்ட பயணங்களை நோக்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று டெல்லியில் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள், விண்வெளி துறையினர்,விண்வெளி துறையில் இஸ்ரோவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி விண்வெளி துறையினருக்கு தனது அறிவுறுத்தல்களை வழங்கினார். அக்.21ல் ககன்யான் … Read more

மணிப்பூரை விட இஸ்ரேல் மீது பிரதமர் அதிக கவனம் கொண்டுள்ளார்.! ராகுல்காந்தி விமர்சனம்.!

Congress MP Rahul Gandhi - PM Modi

அடுத்த மாதம் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மிசோராம் மாநிலமும் ஒன்று. 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மிசோராமில் வரும் நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சார வேலைகளை பிரதான கட்சியினர் தீவிரப்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மிசோரம் சென்றுள்ளார். இன்று (திங்கள்கிழமை) மிசோராம் தலைநகர் ஐஸ்வாலில் ஆளுநர் மாளிகை நோக்கி சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் பேரணி மேற்கொண்டார். மிசோரம் … Read more

இலங்கையை வந்தடைந்தது செரியபாணி பயணிகள் கப்பல்!!

Cheriyapani

நாகையில் இருந்து புறப்பட்ட செரியபாணி பயணிகள் கப்பல் இலங்கை காங்கேசன்துறைக்கு சென்றடைந்தது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அக்.12ல் தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்துக்கு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கியுள்ளது. நாகை துறைமுகத்திற்கு அக்.7ம் தேதி சொகுசு கப்பல் வந்தடைந்த நிலையில், அக்.9ல் … Read more