மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு

17-வது  மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.மேலும்  மத்திய அமைச்சரவை குழுவும் பதவியேற்றது. அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டன. இதனால் மக்களவைக்கு புதிதாக சபாநாயகரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக  நடைபெற்று வந்தது.கடந்த 17 -ஆம் தேதி மக்களவை கூடியது. இதனால் மக்களைவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி வீரேந்திரகுமார் நியமனம் செய்யப்பட்டார். புதிய எம்.பிக்களுக்கு … Read more

நாட்டின் வளர்ச்சி,வேலைவாய்ப்பை அதிகரிக்க 2 புதிய கேபினட் குழு-பிரதமர் நரேந்திர மோடி

நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.இதனையடுத்து  நேற்று இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 58 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதில்  25 அமைச்சர்கள் , 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்.பின்னர் இலாகாக்கள்  ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி  நாட்டின் வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பை அதிகரிக்க 2 புதிய கேபினட் குழுக்களை அமைத்தார் .முதலீட்டிற்கான கேபினட் குழுவில் அமித்ஷா, … Read more

மோடி பிரதமராக பதவியேற்கும் விழா -திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு

நடத்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெருமைப்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிரதமர் மோடியின் பதிவு ஏற்பு விழா வருகின்ற 30-ஆம் தேதி நடைபெறுகிறது. . இந்த விழாவில் பங்கேற்ற பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள்,வெளிநாட்டு அதிபர்கள் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கபப்ட்டுள்ளது.நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா பங்கேற்க உள்ளதாக … Read more

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக  நேற்று நடைபெற்றது.இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில் குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி.

மக்களவை  தேர்தல்: மக்களவை வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனு தாக்கல்செய்கிறார்

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல்செய்கிறார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.இதனால் நேற்று பிரதமர் மோடியின் தலைமையில்  பேரணிநடைபெற்றது. இந்நிலையில் இன்று வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல்செய்கிறார்.

மோடி அரசு நிச்சயம் தோற்கும்…முதல்வர் அதிரடி பேச்சு…!!

 வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசு நிச்சயம் தோற்கும் என்று முதல்வர் சந்திரபாபுநாயுடு கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரில் நடந்த தெலுங்கு தேசம் கட்சி பொதுக் கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபுநாயுடு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- மாநில பிரிவினை சட்டப்படி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து கூட்டணியில் நீடித்து வந்தோம். ஆனால் மத்திய அரசு மாநில சிறப்பு அந்தஸ்தை தராமல் ஏமாற்றியதால் கூட்டணியில் இருந்து … Read more

என்னையும் என் குடும்பத்தை விட்டுவிடுங்கள்! பிரபல நடிகர் உருக்கம்..!

சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி லண்டனில் பேசும்போது தமிழ்நாட்டின் 125 கோடி மக்களும் தன் குடும்பத்தினர் என கூறினார். இதற்கு பதிலளித்துள்ள நடிகர் கருணாகரன் “என்னையும் என் குடும்பத்தினரையும் அதில் சேர்க்காதீர்கள். சாரி” என கூறியுள்ளார். பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடி லண்டனில் கத்துவா பாலியல் வன்கொடுமை பற்றி பேசும்போது ரேப் என்பது ரேப் தான் அதை அரசியலாக்காதீர்கள் என கேட்டுகொண்டது குறிப்பிடத்தக்கது.

பயத்தில் மோடி ஒத்திவைத்த அறிவியல் மாநாடு…??

இந்திய வரலாற்றில் முதல் முறையாக, பிரதமருக்கு எதிராக மாணவர்கள் போராடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்திய விஞ்ஞானிகளின் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இந்திய விஞ்ஞானிகளின் சங்கமமான ‘இந்திய அறிவியல் மாநாடு’ நடைபெறுவது வழக்கம். ஜனவரி மாதத்தில் இந்த நிகழ்வு பிரதமரின் பணிப் பட்டியலில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். எதிர்வரும் ஜனவரி 3-7 தேதிகளில் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து தலித் விரோத திட்டங்களை செயல்படுத்தும் … Read more

பிரதமர் மோடி தனது அரசியலை முடித்து கொண்டு இமயமலைக்கு சன்னியாசம் போகலாம்; போட்டு தாக்கும் ஜிக்னேஷ் மேவானி

குஜராத் சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றுள்ள தலித் இயக்க தலைவர் ஜிக்னேஷ் மேவானி “இந்திய பிரதமர் நரேந்திர மோடி இனிமேலும் நாட்டுமக்களை தனது பொய், புரட்டு பேச்சுக்களால் ஏமாற்றுவதை நிறுத்திக் கொண்டு இமயமலைக்கு சென்று தவ வாழ்க்கை வாழவேண்டும்” என்று கடுமையாக சாடியுள்ளார். இதனால் சங்கி ஆதரவாளர்கள் கடுமையாக கொதித்து எழுந்து ஜிக்னேஷ் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரவேண்டும் என்று கூக்குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து … Read more

ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம்.நிவாரண பணிக்கு ₹747 கோடி, சீரமைப்பு பணிக்கு ₹5,255 கோடி வழங்க கோரிக்கை வைத்தோம்.அரசு அளித்த கோரிக்கையை பரிசீலித்து மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் மோடி கூறினார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.