பிரதமர் மோடி காணொலி வாயிலாக இங்கிலாந்தில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார்!

இங்கிலாந்தில் ஜூன் 11 முதல் 13 ஆம் தேதி வரை ஜி-7 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்கிறார். இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய ஜி 7 அமைப்பின் மாநாடு இங்கிலாந்திலுள்ள கார்ன்வால் எனுமிடத்தில் ஜூன் 11 முதல் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.  இந்த ஜி-7 மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இங்கிலாந்து … Read more

மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி என்ற பிரதமரின் அறிவிப்பை வரவேற்கும் தமிழக முதல்வர்..!

இன்று மக்களிடம் உரையாற்றும் போது, பிரதமர் மாநிலங்களுக்கு ஜூன் 21 ஆம் தேதியிலிருந்து இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.  இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறியிருப்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி இன்று மாலை 5 மணியளவில் மக்களிடம் உரையாற்றும் போது, மாநிலங்களுக்கு ஜூன் 21 ஆம் தேதியிலிருந்து இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்தியாவில் உற்பத்தியாகும் 75% தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து நேரடியாக மாநிலங்களுக்கு வழங்கும் … Read more

இறந்தவர்களின் உடலை மயானங்களில் எரிக்க முடியவில்லை – கே.எஸ் அழகிரி

இந்த நெருக்கடியான சூழலில் அடிக்கடி மனம் திறந்து பேசுகிற பிரதமர் மோடியைப் பார்க்க முடியவில்லை என கே.எஸ் அழகிரி விமர்சனம். தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பறவை வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த சமயத்தில் ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ சார்ந்த உபகாரணங்களுக்கு பல இடங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் உயிரிழப்பு சற்று அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா … Read more

மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி உதவி வழங்க வேண்டும் – பிரதமருக்கு, முதலமைச்சர் கடிதம்!!

கொரோனாவால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடுசெய்ய சிறப்பு நிதி உதவி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம். இதுதொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்புயுள்ளார். அதில், கொரோனா தொற்றால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்தத் தேவையான தடுப்பூசிகளையும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளையும் மாநில அரசுகள் கொள்முதல் செய்து வருகின்றன. இதனைக் கருத்தில்கொண்டு ஜிஎஸ்டி கவுன்சிலோடு கலந்தாலோசித்து, இந்தப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி … Read more

ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு – கே.எஸ் அழகிரி விமர்சனம்

ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி விமர்சனம். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இன்றைக்குத் தடுப்பூசி போடும் அளவு ஒரு நாளைக்கு 17 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது. இதே நிலை நீடித்தால் 94 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட 1,000 நாட்களாகிவிடும். அதாவது, 3 ஆண்டுகள் ஆகிவிடும் என குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான நாடுகள் தடுப்பூசியை … Read more

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி – பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. தேர்தல் முடிவுகளில் திமுக முன்னிலை பெற்ற நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதில் நாட்டின் வளர்ச்சிக்காகவும், மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்க்காகவும் மற்றும் கொரோனாவை வீழ்த்துவதற்கு இணைந்து செயல்பட வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு … Read more

இணைந்து செயல்படுவோம் – மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

தமிழகத்தின் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து. தமிழக சட்டமன்ற தேர்த்லின் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 158 இடங்களிலும், அதிமுக 76 இடங்களிலும் முன்னிலை பெற்று பல இடங்களில் வெற்றி அறிவித்து வருகின்றனர். அதிகமான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளதால், தமிழகத்தில் முக ஸ்டாலின் தனிபெருபான்மையுடன் ஆட்சி அமைக்கிறார். திமுகவின் வெற்றிக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களும், தெரிவித்து வருகின்றனர். … Read more

#breaking: அசாம் மாநிலத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை.!

அசாம் மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜக தான் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை பொது தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் களம் கண்டுள்ளனர். இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அசாமில் ஆளும் கட்சியான பாஜக தான் தொடர்ந்து முன்னிலை வகித்து … Read more

#BREAKING: கடும் போட்டி….மேற்குவங்கத்தில் தொடர் முன்னிலையில் மம்தா!! வெல்ல போவது யார்?

மேற்குவங்க மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் தொடர் முன்னிலை வகித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான நேரடிப் போட்டியாகவே இந்த தேர்தல் மாறிவிட்டது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளும் களத்தில் இருந்தாலும் அவை ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு கணிப்புகள் இல்லை. இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் … Read more

#ElectionBreaking: அதிரடியாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை…மேற்குவங்கத்தில் முன்னிலை வகிக்கும் மம்தா!!

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை. மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் திரிணாமுல் காங், பாஜக, காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சரியாக 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான … Read more