மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, எந்த நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை- பன்னீர்செல்வம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, எந்த நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். அதேபோல்  தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் … Read more

தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை-பன்னீர்செல்வம்

மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து … Read more

ஜெ.மரணம்:விசாரணைக்காக நாளை மறுநாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக சம்மன் !!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை மறுநாள் (பிப்ரவரி 28-ஆம் தேதி) விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.   அதன் பின்னர் தொடர்ந்து … Read more

ஜெ.மரணம்:ஆணையத்தில் ஆஜராக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு சம்மன்!!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.   அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று … Read more

முதலமைச்சர்,துணை முதலமைச்சரின் பதவிக்கு ஆபத்து..!மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது …!சசிகலா வைத்த செக்

கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிசாமி தாக்கல் மனுவுக்கு சசிகலா தரப்பு பதில் மனு தாக்கல் செய்தது. கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி அதிமுக முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்ய … Read more

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு அதிமுகவின் இணையதளத்தில் வெளியீடு

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இந்த இலவச கையேட்டை http://www.ammakalviyagam.in  என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அம்மா கல்வியகம் சார்பில், நீட் போட்டித்தேர்வுக்கான இலவச கையேடு பதிவிறக்கம் செய்வதை அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  

தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்: துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவிப்பு!

இன்று நடைபெறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இதில் துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். அது குறித்த ஒரு தகவல் :- வருவாய்த் துறை ரூ. 6,144 கோடி குடிமராமத்து பணிகளுக்கு ரூ. 300 கோடி நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 11,073.66 கோடி பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.27,205.88 கோடி பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி உயர்கல்வித் துறைக்கு ரூ.4620.20 கோடி ரயில்வே பணிகள் … Read more

தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்!

  தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் சார்பில் கீழ்கண்ட துறைகளுக்கான நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ₹750 கோடி ஒதுக்கீடு மகளிர் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சானிட்டரி … Read more

சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் உரையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்து முடிந்ததும் இன்றைய சட்டசபை அலுவல் நிறைவுக்கு வரும். பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், சட்டசபை … Read more

குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய மாணவ ,மாணவிகளை காப்பாற்றியர்களுக்கு வீரச்செயலுக்கான விருது வழங்க கோரிக்கை…!!

தேனி மாவட்டம் குரங்கணியில் உள்ள மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய மாணவ ,மாணவிகளை காப்பாற்றிய குரங்கணியைச் சேர்ந்த மரக்காமலை, காமராஜ், பாக்கியராஜ், சங்கர் ஆகியோருக்கும் அந்த கிராமத்து மக்களுக்கும் வீரச்செயலுக்கான விருதுகளை வழங்க என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) சார்பில் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி,அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) மாநிலச்செயலாளர் P.சண்முகம் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்துகொண்டனர்.