முதலமைச்சர்,துணை முதலமைச்சரின் பதவிக்கு ஆபத்து..!மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது …!சசிகலா வைத்த செக்

கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிசாமி தாக்கல் மனுவுக்கு சசிகலா தரப்பு பதில் மனு தாக்கல் செய்தது.
கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி அதிமுக முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும்.
Image result for கே.சி.பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்ய வேண்டும்.
இருவரும் இணைந்து கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்கம் செய்ய எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.
இதன் பின் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம்,அனைத்து தரப்பினரும் இந்திய தேர்தல் ஆணையத்தில் 3 வாரத்தில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.அதில் முதல்வர், துணை முதல்வர் மட்டும் அல்லாமல் சசிகலாவும் பதில் 3 வாரத்தில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.
Image result for ops eps sasikala

மேலும் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்ட 4 வாரத்திற்குள் கே.சி.பழனிசாமி மனு மீது முடிவெடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் கே.சி.பழனிசாமியின் மனு மீது முடிவெடுக்க உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து முதல்வர், துணை முதல்வர் தொடர்ந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில்  கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிசாமி தாக்கல் மனுவுக்கு சசிகலா தரப்பு பதில் மனு தாக்கல் செய்தது.
அதில்  அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று  தலைமை தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பு மனு அளித்துள்ளது.அதேபோல் அதிமுக கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும் சசிகலா தரப்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Leave a Comment