தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த முயன்றால் எதிர்த்து போராடுவோம் – அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழகத்தில் நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவு தேர்வை  என பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம். நீட் தேர்வை நடத்தினால் அதை எதிர்த்து போராடுவோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இருப்பினும் மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்குவது குறித்து … Read more

நீட் ஆள் மாறாட்டவழக்கு.. மேலும் ஒரு இடைத்தரகர் கைது..!

கடந்த 2019-ஆம் ஆண்டு நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் நடந்ததாக புகார் எழுந்த நிலையில், மருத்துவ படிப்பில் மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடந்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் முதலாமாண்டு படித்த மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோா்கள் என மொத்தம் 18 பேரை சிபிசிஐடி காவலர்கள் கைது செய்தனா். இந்த வழக்கில், இடைத்தரகராக செயல்பட்ட மோகன் மற்றும் ரஷீத் ஆகியோர் தலைமறைவாகினர். இவர்களை போலீசார் தேடிவந்த நிலையில், பெங்களூருவில் … Read more

நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி…தந்தை, மகளுக்கு நிபந்தனை ஜாமீன்..!

நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி செய்த வழக்கில் தந்தை, மகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண்முறையில் மருத்துவ காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்ட பரமக்குடியைச் சேர்ந்த தீக்‌ஷா என்ற மாணவி நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்கள் பெற்று 610 மதிப்பெண் பெற்றிருந்ததாக போலி சான்றிதழ் கொடுத்தது தெரியவர மாணவி தீக்க்ஷா மற்றும் அவரது தந்தையும் பல் மருத்துவருமான பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீது … Read more

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு!

முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  இது குறித்து தெரிவித்துள்ள தேசிய தேர்வு வாரியம் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் படுவதாகவும்,ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்விற்கான தேதி மறு அறிவிப்பில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது

மாணவர்கள் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி சடுகுடு விளையாடுகிறது தேசிய தேர்வு முகமை! – மு.க.ஸ்டாலின்

மாணவர்கள் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி சடுகுடு விளையாடுகிறது தேசிய தேர்வு முகமை. நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இணையத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதனால், சற்று நேரத்திலேயே, தேர்வு முகமை இந்த தேர்வு முடிவுகளை இணையத்தில் இருந்து நீக்கியது. சில மணி நேரங்களுக்கு பின், திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகையில், ‘தேர்வு முகமை … Read more

நீட் விதிகளை புறக்கணித்த புதுச்சேரியின் 7 மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம்!

நீட் விதிகளை புறக்கணித்த புதுச்சேரியின் 7 மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் கலந்து கொள்வதற்கு மாணவர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் விதிமுறைகளை புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரிகள் புறக்கணித்து மாணவர்களை அனுமதித்துள்ளது. இந்நிலையில் நீட் விதிகளை புறக்கணித்து மருத்துவப் படிப்பில் மாணவர்களை அனுமதித்த புதுச்சேரியை சேர்ந்த 7 மருத்துவ கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

தஞ்சையில் மாணவர்களால் நடத்தப்பட்ட நீட் எதிர்ப்பு போராட்டம் – போலீசார் மாணவர்களிடையே கலவரம்!

தஞ்சையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் மற்றும் மாணவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் பல்வேறு அரசியல்வாதிகள் அமைச்சர்கள் நடிகர்கள் ஆகியோரின் எதிர்ப்புக்கு மத்தியில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் நீர் தேர்வு நடைபெற உள்ளது. நீட்தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் சில மாணவர்களும் தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்து மாணவ அமைப்பினர் பல இடங்களில் தற்பொழுது போராடி வருகின்றனர். இன்று காலை தஞ்சாவூரில் … Read more

#BREAKING: நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் – ஐகோர்ட்

நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொள்வோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது . தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீட் அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. நிவாரணம் வழங்கும் அரசு, அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அரசு, அரசியல் கட்சிகள் நிதி, வேலை தருவதாக கூறுவது தற்கொலையை … Read more

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் – நீதிபதி சுப்பிரமணியம்.!

தமிழகத்தில் நேற்றுமுன் தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து,  நடிகர் சூர்யா நேற்று இரவு அறிக்கை வெளியிட்டார். அதில்,  நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதுல் சொல்வது போல் அவலம் எதுவுமில்லை. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் … Read more

ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை எதிர்கட்சிகள் வைக்கிறார்கள்-நயினார் நாகேந்திரன்.!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மூன்று மாணவர்கள் ஜோதிஸ்ரீதுர்கா, ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் நேற்று அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியது. தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாகவும், இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில், தமிழக மாணவர்கள் நீட் தேர்வால்தான் இறக்கிறார்கள் என்ற ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை எதிர்கட்சிகள் வைக்கிறார்கள் என … Read more