நீட் ஆள் மாறாட்டவழக்கு.. மேலும் ஒரு இடைத்தரகர் கைது..!

கடந்த 2019-ஆம் ஆண்டு நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் நடந்ததாக புகார் எழுந்த நிலையில், மருத்துவ படிப்பில் மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடந்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் முதலாமாண்டு படித்த மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோா்கள் என மொத்தம் 18 பேரை சிபிசிஐடி காவலர்கள் கைது செய்தனா்.

இந்த வழக்கில், இடைத்தரகராக செயல்பட்ட மோகன் மற்றும் ரஷீத் ஆகியோர் தலைமறைவாகினர். இவர்களை போலீசார் தேடிவந்த நிலையில், பெங்களூருவில் இருந்த ரஷீத் கடந்த மாதம் தேனி நடுவா் மன்றத்தில் சரணடைந்தாா்.

இந்நிலையில், மற்றோரு இடைத்தரகரான மோகன் இன்று சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலிசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மோகனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கபட்டிருந்த நிலையில், குடியுரிமை அதிகாரிகள் மூலம் மோகனை சி.பி. சி.ஐ.டி போலிசார் கைது செய்துள்ளனர்.

author avatar
murugan