திருவாரூரில் உள்ள சசிகலா,இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரின் சொத்துகள் அரசுடமை

திருவாரூரில் உள்ள சசிகலா,இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரின் சொத்துகள் அரசுடமை

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரின் சொத்துகளை அரசுடமையாக்கப்பட்டுள்ளது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையான நிலையில், அபாராதத்தொகை 10 கோடி ரூபாய் செலுத்தாததால் சுதாகரன் மட்டும் சிறையில் உள்ளார்.2017-ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் இவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

அந்த இறுதி தீர்ப்பின் அடிப்படையில் இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யட்டப்பட்டு வருகிறது. தமிழக அரசு இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,தஞ்சை, தூத்துக்குடி  மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் இறுதித்தீர்ப்பின் படி 3 பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துக்கள் அரசின் சொத்துக்களாக அறிவிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube