செவ்வாய் கிரகத்தில் உயிர்கள்?….கிடைத்த நீர் ஆதாரங்கள் – நாசா கண்டுபிடிப்பு..!

செவ்வாய் கிரகத்தில் எரிமலை செயல்பாடுகள்,நீர் ஆதாரம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா கடந்த ஆண்டு  பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. இதனையடுத்து,கடந்த பிப்ரவரி மாதம் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ க்ரேட்டர் எனப்படும் பகுதியில் தரையிறங்கியது. அப்பகுதியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஏரி இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. அதன்பின்னர்,பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை தொடர்ந்து பூமிக்கு அனுப்பி வந்த நிலையில் … Read more

விண்ணிற்கு எறும்புகள்,ஐஸ்கிரீம் மற்றும் ரோபோ கை அனுப்பிய ஸ்பேஸ்எக்ஸ் ….எதற்காக என்று தெரியுமா?..!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் எறும்புகள்,அவகோடா பழங்கள், ஐஸ்கிரீம் மற்றும் ரோபோ கை ஆகியவற்றை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளது. முதல் முறையாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் எறும்புகள், இறால்கள், வெண்ணெய் ,அவகோடா பழங்கள் மற்றும் மனித கை அளவிலான ரோபோ கைகள், ஜீரோ க்ராவிட்டி ஆராய்ச்சி பொருட்கள், விண்வெளி வீரர்களுக்கான உணவு, ஐஸ் கிரீம் போன்ற ஏராளமான பொருட்களை அதன் ட்ராகன் கார்கோ ஷிப் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) விண்ணில் ஏவியுள்ளது. இது ஸ்பேஸ் … Read more

2100 – ஆம் ஆண்டுக்குள் 12 இந்திய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் – நாசா!

2100 ஆம் ஆண்டுக்குள் 12 இந்திய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்ப நிலை உயர்ந்து வருவது குறித்து சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள ஐபிசிசி  அறிக்கையில், மனித நடவடிக்கையின் காரணமாக அடுத்த 10 ஆண்டுக்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக பனிப்பாறைகள் உடைந்து, கடல் நீர்மட்டம் … Read more

செவ்வாய் கிரகம் போன்ற சூழலில் வசிக்க பயிற்சி – 4 பேர் தேவை; நாசா அழைப்பு!

செவ்வாய் கிரகம் போன்ற சூழலில் ஓராண்டு தங்கியிருந்து பயிற்சி பெற 4 பேர் தேவை என நாசா அழைப்பு விடுத்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ளதா என அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா ஆய்வு செய்து வருகிறது. இதில், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிக்க முடியும் என தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு மனிதர்களை அனுப்புவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது.  இதற்கு முன்னேற்பாடாக ஹூஸ்டன் அருகே பாலைவனப் பகுதியில் ஒரு மணற்குன்றின் மீது செவ்வாய் கிரகம் … Read more

சூரியன் பற்றி நாசா வெளியிட்ட பதிவு.., வைரலாகும் வீடியோ..!

சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெடிக்கும் கொரோனல் மாஸ் எஜெக்ஷன் வெளியிட்ட நாசா. பல வருடங்களாக சூரியன் பற்றி தகவல்கள் சரியாக கிடைப்பதில்லை, சில தகவல்கள் நம்பமுடியாததாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போதைய தொழில்நுட்பத்தின் வசதியை பயன்படுத்தி விஞ்ஞானிகள் சூரியன் பற்றிய ஒரு தகவலை நாசா வெளியிட்டுள்ளது. நாசா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெடிக்கும் ஒரு கொரோனல் மாஸ் எஜெக்ஷன்  (சிஎம்இ) காட்டுகிறது. இதுகுறித்து நாசா சூரிய குடும்பத்தைப் பற்றிய எங்கள் ஆய்வு? … Read more

வெள்ளிக்கோள் சோதனை-நாசாவின் புதிய 2 திட்டங்கள்..!

பூமிக்கு அருகில் உள்ள வெள்ளிக்கோளினை பற்றி ஆய்வு செய்யவிருப்பதாக  நாசா அறிவித்துள்ளது. வெளிக்கிரகத்தில் பூமியை போன்று முன்பு உயிர்வாழ ஏற்ற சூழல் இருந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதனால் வெள்ளிக்கிரகத்தில் இருக்கும் தட்பவெப்பநிலை மற்றும் புவியியல் தன்மையை பற்றி ஆய்வு செய்வதாக நாசா முடிவெடுத்துள்ளது. நாசாவின் இந்த இரு திட்டங்களுக்கு டாவின்சி மற்றும் வெரிட்டாஸ் என்று பெயரிட்டுள்ளனர். டாவின்சி திட்டத்தில் நாசா வெள்ளிக்கோளின் வரலாறு, இதன் தோற்றம், இங்கு கடல்கள் இருந்ததற்கு ஏதும் அடையாளம் இருக்கிறதா என்றும் மற்றும் … Read more

#Breaking: 4 பேருடன் விண்வெளிக்கு புறப்பட்ட எலான் மஸ்கின் “பால்கன் 9” ராக்கெட்..நாசா புதிய சாதனை!

கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 4 வீரர்களை கொண்ட பால்கன் 9 ராக்கெட், அமெரிக்க நேரப்படி இன்று காலை 5:10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா தொடங்கியது. இதற்காக நாசா, “crew 2” என்ற திட்டத்தை கொண்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதே இந்த  திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. அதன்படி கடந்த மே மாதம், நாசா விண்வெளி வீரர்களான பாப் பென்கன் … Read more

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்த ரோவர்- நாசா சாதனை…!

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அணுப்பிய பெர்சிவரென்ஸ் ரோவர்,செவ்வாயின் வளிமண்டலத்திலிருந்து கார்பன் டை ஆக்சைடை தூய்மையான, சுவாசிக்கக்கூடிய ஆக்ஸிஜனாக மாற்றியுள்ளது.இதன்மூலம் நாசா மற்றொரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. அமெரிக்க வெண்வெளி ஆய்வு மையமான நாசா,கடந்த பிப்ரவரி மாதம் பெர்சிவரென்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ளது.செவ்வாயில் தரையிறங்கிய பெர்சிவரென்ஸ் ரோவரானது தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. இந்த நிலையில்,ரோவரானது தற்போது செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை எடுத்து ஆக்சிஜனாக மாற்றி … Read more

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ‘இன்ஜெனியூட்டி ஹெலிஹாப்டர்’…!மனித வரலாற்றின் மிகப்பெரிய சாதனை..!

மனித வரலாற்றிலேயே முதல்முறையாக செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக பறக்க விட்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சாதனைப் படைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா? அல்லது மனிதர்கள் வாழும் சூழ்நிலைகள் இருக்கிறதா என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது மனித குலத்தின் மிகப்பெரிய கனவாக இருந்தது. இந்த நிலையில்,கடந்த  ஆண்டு ஜூலை மாதம் நாசா அனுப்பிய பெர்சிவெரென்ஸ் ரோவர் என்ற விண்கலம் 7 மாதங்களில் 292 மில்லியன் கிலோமீட்டர் பயணித்து பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி … Read more

செவ்வாய் கிரகத்தில் செயலிழந்து வரும் ரோவர் விண்கலம்…!

பூமியைப் போன்று வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்குமா? என்ற கேள்வி மனிதர்களுக்கு எப்போதும் இருந்து கொண்டே தான் உள்ளது.அந்த காரணத்தினால் பல கோள்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருந்தாலும்,செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா?,அங்கு மனிதர்கள் வாழ்வதற்கேற்ப சூழ்நிலைகள் இருக்கிறதா? என்று கண்டுபிடிக்கும் பணிகளில் நீண்ட காலமாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து,அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கடந்த ஆண்டு பெர்சிவ்ரென்ஸ் ரோவர் என்ற விண்கலத்தையும்,அதனுடன் 1.8 கிலோ எடை அளவிலான சிறிய ஹெலிகாப்டர் ஒன்றையும் இணைத்து செவ்வாய் … Read more