புயல் எச்சரிக்கையால் முதலமைச்சர் நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

mk stalin

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், ஒருசில நாட்களில் புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் (Michaung) என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 3-ஆம் தேதி புயலாக வலுப்பெற்று 4-ஆம் தேதி மாலை கரையை கடக்க உள்ளது என்றும் … Read more

புயல் எச்சரிக்கை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

storm warning

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் ( Michaung) என பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் இருந்து 790 கிலோமீட்டர் கிழக்கு தெற்கு திசையில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

தமிழ், திராவிடம் ஒரு பண்பாட்டு அடையாளம்.! அயோத்திதாசர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.!

Tamilnadu CM MK Stalin inaugurated Iyothee Thass statue

சாதி மத கோட்பாடுகளை எதிர்த்த சமூக சீர்திருத்தவாதி, திராவிட கொள்கைகள் தோன்றுவதற்கு வித்திட்ட முக்கிய தலைவர் , பன்மொழி கலைஞர் என போற்றப்படும் அயோத்திதாசருக்கு முழு உருவ சிலையும், மணி மண்டபமும் அமைக்கப்படும் என முதலவர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2021இல் அறிவித்தார். அதன்படி, இன்று சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் அமைந்துள்ள வளாகத்தில் 2.49 கோடி ரூபாய் செலவில் அயோத்திதாசருக்கு முழுஉருவ சிலையுடன் , மணிமண்டபம் அமைக்கபட்டது. இந்த சிலை மற்றும் மணிமண்டபத்தை முதல்வர் … Read more

பெண்களே வாருங்கள் உலகமே உங்களுக்காக காத்திருக்கிறது… முதலமைச்சர் ஸ்டாலின் உரை!

mk stalin

திருப்பூர் வஞ்சிபாளையம் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இதன்பின் உரையாற்றிய முதலமைச்சர், தீரன் சின்னமலை பெயரை சொன்னாலே உணர்ச்சியும், எழுச்சியும் வருகிறது. உடல்நிலையை கருத்தில் கொண்டு காணொளிக்காட்சி மூலம் கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்துள்ளேன். நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டாமென மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் காணொலி மூலம் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. தீரன் சின்னமலை பெயரை கல்லூரிக்கு வைத்ததற்கு பாராட்டுகள். … Read more

பிறந்தான் பரிசு… துணை முதல்வர் பொறுப்பு.? அமைச்சர் உதயநிதியின் கலகலப்பான பதில்.!

Minister Udhayanidhi stalin - Tamilnadu CM MK Stalin

தமிழக துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அமைச்சர்கள்,திமுக பிரதிநிதிகள், பிற கட்சி தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் மு.கருணாந்தி நினைவிடம், அறிஞர் அண்ணா … Read more

முன்னாள் காவல்துறை தலைவர் நடராஜ் மீதான வழக்கை திரும்ப பெறுக.. எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்!

Nataraj

தமிழக காவல்துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்த ஆர்.நடராஜ், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து, கடந்த 2016ம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சூழலில் வாட்ஸ் அப் குழு ஒன்றில் இந்துக்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பொய்யான செய்தி பரப்பியதாக முன்னாள் காவல்துறை தலைவர் நடராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், ஒரு ஓய்வுபெற்ற … Read more

ஆளுநர் அடையாள பதவி மட்டுமே.. மக்கள் பிரதிநிதிகளுக்கே அதிகாரம்..உச்சநீதிமன்றம் தீர்ப்பு.! முதல்வர் வரவேற்பு..

supereme court

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக அம்மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதாவது, பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் மாநில ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த சில நாட்களாக உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மார்பு முன்பு நடைபெற்று வருகிறது. அப்போது, பஞ்சாப் மாநில  தரப்பு மற்றும் ஆளுநர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் … Read more

நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார்.. முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!

mk stalin

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற திருமங்கலம் கோபால் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு, புதுமண தம்பதியினரை வாழ்த்தினார். இதன்பின் பேசிய முதலமைச்சர், சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது திமுக ஆட்சி. 1967ல் அண்ணா தலைமையில் அமைந்த திமுக அரசு சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது. 1967க்கு முன் சுயமரியாதை திருமணங்களை நடத்த முடியாத சூழல் இருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது, சட்ட அங்கீகாரம் வழங்கியவர் கருணாநிதி என்றார். திமுகவில் … Read more

பாத்திமா பீவி மறைந்தார் என்றறிந்து வருந்துகிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

Fathima beevi

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழக முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி (96) உடல்நல குறைவு முதிர்வு காரணமாக இன்று காலமானார். கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி பாத்திமா பீவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். 1927ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பிறந்த பாத்திமா பீவி, திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் வேதியியலில் பட்டமும், பின்னர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் முதல் வகுப்பில் தங்கப் … Read more

மகளிர் உரிமைத் தொகை.. தகுதியானவர்களுக்கு 10 நாட்களில் SMS.. அரசு அதிகாரிகள் தகவல்!

Magalir Urimai Thittam

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு 10 நாட்களில் குறுஞ்செய்தி வரும் என அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 விண்ணப்பங்கள் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி, … Read more