இன்று பட்ஜெட் தாக்கல்… ஆளுநர் ரவி திடீர் டெல்லி பயணம்!

rn ravi

இந்தாண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 12ம் தேதி தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது. இருப்பினும், தமிழக அரசு தயார் செய்து கொடுத்த உரையை முழுமையாக படிக்காமல், ஆளுநர் ரவி புறக்கணித்துவிட்டு சென்றார். கடந்த ஆண்டு அரசு உரையில் சில வார்த்தைகளை புறக்கணித்த ஆளுநர், இந்த முறை முழுமையாக படிக்காமல் புறக்கணித்தது சர்ச்சனையானது. அரசு கொடுக்கும் உரையை படிப்பது ஆளுநரின் கடமை என கூறி, பேரவையில் அவருக்கு எதிராக தீர்மானம் … Read more

ஆளுநரை வைத்து அரசாங்கம் நடத்த நினைக்கிறார்கள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

mk stalin

திமுக கட்சியின் இரண்டாவது இளைஞரணி மாநாடு வரும் 21ம் தேதி சேலத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் ஓட்டத்தை இன்று சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், கழக தலைவர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான என்னை உங்கள் அனைவரிடமும் அடையாளப்படுத்தியது இளைஞரணிதான். 1982-ஆம் ஆண்டு … Read more

அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஆளுநர் ஒப்புதல்..!

சொத்து குவிப்பு வழக்கில் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் தலா மூன்றாண்டு சிறை  தண்டனையும், தலா 50 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும்,  சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி 30 நாட்களுக்குள் சரணடைய உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அவகாசம் வழங்கினார். பொன்முடிக்கு  மூன்று ஆண்டுகள் சிறை  தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர், எம்.எல்.ஏ பதவியை பொன்முடி இழந்தார். இதையடுத்து பொன்முடி வகித்து வந்த உயர் … Read more

மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே ஆளுநர் முயற்சி.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

minister ragupathy

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்காக உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றசாட்டியுள்ளார். சென்னையில் செய்தியார் சந்திப்பில் பேசிய அமைச்சர், ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்புகிறார் ஆளுநர். தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறிபோய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஆளுநர் செயல்படுகிறார். துணைவேந்தரை நியமிக்கக்கூட மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கக்கூடாது என நினைப்பது எந்த வகையில் நியாயமாக … Read more

இன்று டெல்லி புறப்படுகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

rn ravi

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று சென்னையில் இருந்து  புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்தி ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த மசோதாக்களுக்கு  ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்தது. இதனால், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. போதைப்பொருள் வாங்குவதற்காக பெற்ற பிள்ளைகளை … Read more

அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது.. ஆளுநர் மீண்டும் சர்ச்சை பேச்சு..

rn ravi

இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் அரசமைப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது. மிகுந்த அழுத்தங்களுக்கு இடையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க … Read more

ஆளுநர் அடையாள பதவி மட்டுமே.. மக்கள் பிரதிநிதிகளுக்கே அதிகாரம்..உச்சநீதிமன்றம் தீர்ப்பு.! முதல்வர் வரவேற்பு..

supereme court

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக அம்மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதாவது, பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் மாநில ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த சில நாட்களாக உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மார்பு முன்பு நடைபெற்று வருகிறது. அப்போது, பஞ்சாப் மாநில  தரப்பு மற்றும் ஆளுநர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் … Read more

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி காலமானார்..!

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழக முன்னாள் ஆளுநருமான நீதிபதி பாத்திமா பீவி (96) காலமானார். கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். பாத்திமா பீவி ஏப்ரல் 30, 1927 அன்று கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பிறந்தார். இவர் திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்றார். பின்னர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் முதல் வகுப்பில் தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்றார். 1950-ஆம் ஆண்டு  நவம்பர் 14 … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் கருத்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை பதிலடி!

tamilisai Soundararajan

பல்கலைக்கழக வேந்தர்கள் பொறுப்பில் முதலமைச்சர் இருந்தால் முழுவதும் அரசியல் சாயம் பூசப்படும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார். அதாவது, ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பாடகி பி.சுசீலா மற்றும் பி.எம்.சுந்தரம் ஆகிய இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்கி கவுரவித்தார். இதன்பின் முதல்வர் ஸ்டாலின் … Read more

ஆளுநர் அனுமதி மறுக்கும் மர்மம் என்ன? பின்னணியில் பாஜக மாநில தலைவரா? ஜோதிமணி எம்.பி கேள்வி!

jothimani

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆளுநர் அனுமதி மறுக்கும் மர்மம் என்ன? என்றும் இதன் பின்னணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளாரா? எனவும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ஜோதிமணி எம்பி கூறியதாவது, அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், பிவி ரமணா, எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் வீரமணி ஆகிய 4 பேர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு, ஆளுநர் … Read more