சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.! அமைச்சர் உதயநிதி பேச்சு.!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று ரூ.11.98 கோடி மதிப்பில்  உள்ள சென்னை மாநகராட்சி சார்பில் நிறைவுற்றுள்ள 13 திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்ததோடு, ரூ.152.67 கோடி மதிப்பில் உள்ள சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள 52 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார். அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கு.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! இந்த விழாவில் கலந்து … Read more

9 வருட பாஜக ஆட்சியே பெரிய பேரிடர் தான்… அமைச்சர் உதயநிதி பதிலடி.! 

Union Minister Nirmala Sitharaman - TN Minister Udhayanidhi stalin

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பெருதளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அதே போல வட மாவட்டங்களிலும் மிஃஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. இந்த கனமழை வெள்ளம் குறித்தும், அதற்கான மீட்பு பணிகள் குறித்தும் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த நிவாரண பணிகள் குறித்தும் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் … Read more

ஆளுநர், அமித்ஷா அப்பா சொத்தை நாங்கள் கேட்கவில்லை.. தமிழிசைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி.!

Telangana Governor Tamilisai Soundarajan - Minister Udhayanidhi stalin

மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சரி செய்ய முதலில் தமிழக அரசு சார்பில் 5000 கோடி ரூபாய் கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய அரசு சார்பில் 450 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மத்திய குழு தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த குழுவிடம் தமிழக அரசு சார்பில் தற்காலிக உடனடி நிவாரணமாக சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத்திற்காக சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயையும் கேட்கப்பட்டது. இந்நிலையில் … Read more

முதலில் இவங்களுக்கு… அப்புறம் அவங்களுக்கு… ரூ.6000 நிவாரணத்தொகை.! அமைச்சர் உதயநிதி விளக்கம்.!

Chennai flood relief 2023 - Minister Udhayanidhi stalin

மிக்ஜாம் புயல் – கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு , திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வெள்ள நீர் குடியிருப்புகளில் புகுந்ததால் பெரும்பாலான மக்கள் இன்னும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை அறிவித்து அளித்து வருகிறது. எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயல் – அமைச்சர் உதயநிதி ஏற்கனவே தமிழக அரசு சென்னை முழுவதும் உள்ள மக்களுக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் … Read more

எங்கள் வரிப்பணம் தானே..? அவங்க அப்பன் வீட்டு பணத்தையா கேக்குறோம்.? – அமைச்சர் உதயநிதி விளாசல்.!

Minister Udhayanidhi stalin

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ .6000 , உயிர் சேதம், பொருள்சேதத்திற்கு நிவாரணம் என பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. மிதக்கும் எண்ணையை எடுக்க தீவிர முயற்சி… தமிழக அரசு நடவடிக்கை.! பல்வேறு இடங்களில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட … Read more

அன்பு அண்ணன் அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்.! மேயர் பிரியா வாழ்த்து.!

அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள். என  அமைச்சர் உதயநிதிக்கு சென்னை மேயர் பிரியா வாழ்த்து.  சென்னை சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சென்னை மாநகர மேயர் ப்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில், அமைதியாய் இருந்தாலும், அடக்கமாய்த் திகழ்ந்தாலும், … Read more

முதல்வர் கோப்பைக்கு 47 கோடி.. உதவித்தொகை 6 ஆயிரம்.. அமைச்சர் உதயநிதியின் உத்தரவுகள்…

தனது முதல் கையெழுத்தாக முதல்வர் கோப்பைக்காக நடத்தப்படவுள்ள விளையாட்டு போட்டிகளுக்கு 47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்டார்.  தமிழக அமைச்சரவையில் இன்று நடைபெற்ற மாற்றங்களில் மிக பெரிய மாற்றமாக புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இன்று புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு தலைமை செயலகத்தில் அறை ஒதுக்கப்பட்டது. அதில் முதல் கையெழுத்தாக முதல்வர் கோப்பைக்காக நடத்தப்படவுள்ள விளையாட்டு போட்டிகளுக்கு … Read more

#Breaking : தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்.! அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் பொறுப்புகள்… 

இன்று தமிழக அமைச்சரவையில் அமைச்சர்கள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.   இன்று தமிழக அமைச்சரவையில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. இதில் புதிய அமைச்சராக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார். அதே போல தமிழக அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் கூட்டுறவு துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி … Read more