தெலுங்கில் சிரஞ்சீவி படத்துடன் ரீ என்ட்ரி கொடுக்கிறாரா குஷ்பு.!

மோகன்லால் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியுடன் நடிக்க குஷ்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகிலும் 90ஸில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கோவில் எல்லாம் இவருக்காக ரசிகர்கள் கட்டியுள்ளனர். அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் குஷ்பு. சமீப காலமாக சினிமாவிலிருந்து விலகி இருந்த இவர் … Read more

சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதியளிக்க வேண்டும்! அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து நடிகை குஷ்பு வேண்டுகோள்!

சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதியளிக்க வேண்டும் என நடிகை குஷ்பூ கோரிக்கை.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவது, மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால், ரிலீசுக்கு தயாராக இருந்த திரைப்படங்கள், படப்பிடிப்பு என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால், திரையரங்குகளும் மூடப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவால், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் வீட்டிற்குள் … Read more

நடிகை குஷ்பூவின் ட்வீட்டர் கணக்கு முடக்கப்பட்டதா?

நடிகை குஷ்பூ பிரபலமான நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் உள்ளார். இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டு வந்தார்.  சமீபத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விமர்சித்து ட்வீட் பதிவிட்டு வந்தார். இதனையடுத்து, குஷ்புவின் ட்விட்டர் கணக்கிலிருந்து 2 நாட்களாக எந்த ட்வீட்டுமே செய்யப்படாமல் இருந்த நிலையில், தனது ட்விட்டர் கணக்கை முடக்க முயற்சி நடந்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், ‘ஒரு நாளுக்கு முன்னதாக, … Read more

இதுல என்னங்க தப்பு இருக்கு! நடிகை குஷ்பூ ஓரின சேர்க்கைக்கு ஆதரவா?

நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பல சீரியல் தொடர்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில்,இவர் சமீபத்தில் இந்தியில் ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் வண்ணம் வெளியான, ‘சுப் மங்கள் ஸ்யாதா சாவ்தன்’ திரைப்படத்தை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். இது வைரலாக பேசப்பட்ட நிலையில், ‘ஓரின சேர்க்கைக்கு உச்சநீதிமன்றமே ஆதரவு அளித்து உள்ளது. இந்நிலையில், ஓரினச்சேர்க்கையை ஆதரித்து வெளியான திரைப்படத்தை பாராட்டுவதில் என்ன தவறு உள்ளது.’ என … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகை. ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமையுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, பேசினார். அவ்விழாவில் பேசிய அவர், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது . மேலும் அந்த உருவங்களுக்கு செருப்பு மாலை போடப்பட்டது என்று பேசியுள்ளார். ரஜினியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதன்விளைவாக ரஜினியின் மீது பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டது. … Read more

;தலைவர் 168′ ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டாரிடம் பாராட்டை பெற்ற கீர்த்தி சுரேஷ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அவரது 168வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகின்றனர்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை அடுத்து ரஜினியின் 168வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தினை தயாரித்து வருகிறது.   இப்படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். … Read more

சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாக நடிக்க உள்ளாரா குஷ்பு?! தலைவர் 168 மாஸ் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்ததாக தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதனை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அவரது 168 வது திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் … Read more

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகளே காரணம்.! திமுக எம்பி பேச்சு.!

சென்னையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் பெண்கள் இடம்பெறும் காட்சிகளும் காரணமாக அமைகிறது என கனிமொழி கூறினார். சென்னையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய கனிமொழி மரணதண்டனை மட்டுமே எல்லாம் குற்றங்களுக்கும் தீர்வாகாது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் சமூகத்திற்கும் பொறுப்புள்ளது எனவும், பெண்களுக்கு … Read more

ஏன் இந்த பாகுபாடு? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய நடிகை குஷ்பூ!

மஹாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி மகாத்மா காந்தி குறித்த குறும்படம் ஒன்றை வெளியிட்டார். பின் திரைத்துறையினரிடம் கலந்துரையாடிய பிரதமர், தண்தியில் உள்ள அருங்காட்சியகத்தை அனைவரும் பார்வையிடுமாறு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருடனும் இணைந்து பிரதமர் மோடி திரைப்படம் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து பிரதமர் தனது ட்வீட்டர் பக்கத்தில், திரையுலக பிரபலங்களை சந்தித்தது மகிழ்ச்சி என … Read more

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகை!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் 23-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 26 பேர் கொண்ட பட்டியலை நாசர் மற்றும் விஷால் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், நடிகை குஷ்பூ செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். மேலும், தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.