பிரபலங்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட குட்டிநடிகர்!

குறும்புக்கார குட்டிநடிகர் அஸ்வந்த், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது மழலை பேச்சாலும், திறமையான நடிப்பாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் சுந்தருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/B0OD9HXhB2y/?utm_source=ig_web_copy_link

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகை!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் 23-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 26 பேர் கொண்ட பட்டியலை நாசர் மற்றும் விஷால் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், நடிகை குஷ்பூ செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். மேலும், தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

எஸ் வி சேகருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார் நடிகர் விஷால் !

நடிகர் எஸ் வி சேகர் நேற்று அவரது சமூகவலைத்தளத்தில் பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி கொச்சையாக பதிவிட்ட பதிவுக்கு கடும் கண்டனங்களை பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிமுக அமைச்சர் , பாரதிராஜா போன்றவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்த வேளையில் நடிகர் விஷால் எஸ் வி சேகரின் செயலுக்கு தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, தமிழ் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் மீடியா துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றனர், பெண்கள் முன்னேற்றத்தில் பெரியர் கண்ட … Read more