;தலைவர் 168′ ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டாரிடம் பாராட்டை பெற்ற கீர்த்தி சுரேஷ்!

  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அவரது 168வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். 
  • இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகின்றனர். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை அடுத்து ரஜினியின் 168வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தினை தயாரித்து வருகிறது.

 

இப்படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் , தெலுங்கு படமான மகாநதி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகையாக தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அண்மையில் விருதும் கொடுக்கப்பட்டது. அதனை தலைவர் 168 பட ஷூட்டிங்கின் போது படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கீர்த்திக்கு வாழ்த்துக்கூறி கேக் கொடுத்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.