பரந்தூர் விமான நிலையம் 100% கட்டாயம் வரும் – அமைச்சர் ராமசந்திரன்

மதுரை விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 99% நிறைவடைந்துள்ளது அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.  பரந்தூர் விமான நிலையம் அமைக்க இடம் வழங்குவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் அவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் கூறுகையில், ‘மதுரை விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 99% நிறைவடைந்துள்ளது. பரந்தூர் விமான நிலையம் 100% கட்டாயம் வரும். செய்யின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம். … Read more

இதனை சரி செய்ய முதலமைச்சரே நேரடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளார் – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்புக்கள் ஏற்படுவது வருத்தப்பட வேண்டிய விஷயம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  புதியதலைமுறை செய்தியாளராக பணியாற்றிய முத்துகிருஷ்ணன் என்ற இளைஞர் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். இவரது மரியாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், மழைநீர் வடிகால் விபத்து குறித்து, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் கூறுகையில், மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்புக்கள் ஏற்படுவது வருத்தப்பட வேண்டிய … Read more

பருவமழை : அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள  நிலையில்,அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறுகையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; மேட்டூரில் இருந்து 1.05 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூரிலிருந்து வரும் நீரில் பவானி, அமராவதி,நொய்யல் ஆறுகளின் நீரும் சேருவதால் முக்கொம்புக்கு 2.17 … Read more

#BREAKING : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி தமிழக முதலவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான நிலையில் அமைச்சர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

அரசின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்படும் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்!

அரசின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இன்று காலை தமிழ்நாடு சட்டப்பேரவை தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் கேள்வி நேரம் கொடுக்கப்பட்ட போது சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர், போலியான ஆவணங்களை பயன்படுத்தி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்டெடுக்க அரசு முன்வருமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார். அப்பொழுது தமிழக அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அங்கு … Read more

மழை,வெள்ள பாதிப்பா?,கவலை வேண்டாம்…24 மணி நேரமும் செயல்படும்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

சென்னை:அவசர கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்குபருவ மழை தொடங்கியுள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய தொடர் மழை பெய்தது. இதனால்,2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் 207 மிமீ மழை பதிவாகியுள்ளது.இருப்பினும்,நேற்று முதல் மீண்டும் சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி மழை பெய்து வருகிறது. … Read more

மாணவர்களுக்கு வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் – அமைச்சர் உத்தரவு..!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ்களை காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, பள்ளி … Read more