வெள்ளத்தில் மூழ்கிய கென்யா..பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.!

Kenya floods

Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள சாலைகளில் வெள்ளக்காடாக மாறியுள்ளன. ஐ.நா வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, கென்யாவில் கனமழைக்கு இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். கென்யாவில் மார்ச் மாத இறுதியில் இருந்து கனமழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த வாரத்தில் பெய்த மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெரிய வெள்ள அபாய ஏற்பட வழி வகுத்தது. … Read more

கென்ய தலைநகரில் எரிவாயு வெடித்து விபத்து…2 பேர் பலி, 200 பேர் காயம்.!

Kenyan Gas Explosion

கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் எரிவாயு வெடித்ததில் குறைந்தது இரண்டு பேர் பலியாகியதாகவும், குறைந்தது 200 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. நைரோபியின் எம்பகாசி மாவட்டத்தில் உள்ள எரிவாயு நிரப்பும் ஆலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதன் கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஐசக் மைகுவா மவாரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூடுதல் தகவலாக, 1 பிப்ரவரி 2024, இரவு சுமார் 11:30 … Read more

கென்யாவில் கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர் பலி

கென்யாவின், கியாம்பு நகரத்தில் ஆறு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர். மத்திய கென்யாவிலுள்ள, கியாம்பு நகரத்தில் ஆறு மாடிக்கட்டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடை பெற்று வருகிறது. மீட்புப் படையினர், இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தையை மீட்டுள்ளனர், மேலும் மீட்கப்பட்ட சில பேருக்கு பலத்த காயமடைந்துள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கியாம்பு நகர கவர்னர் கிமானி வமாதங்கி தெரிவித்துள்ளார். … Read more

உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப்;வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஷைலி சிங்..!

உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார். கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் கடந்த சில நாட்களாக  உலக இளையோர் U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,முன்னதாக நடைபெற்ற தடகள போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் ஷைலி சிங் முதலில் 6.34 மீட்டரையும், 2வதாக 5.98 மீட்டரையும் தாண்டி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில்,நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 17 வயதான ஷைலி சிங், 6.59 மீ … Read more

கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து – 17 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

கென்யாவில் 23 ராணுவ வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியதில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டில் வழக்கமான பயிற்சிக்காக ஹெலிகாப்டர் ஒன்று தலைநகர் நைரோபியில் இருந்து நேற்று புறப்பட்டு உள்ளது. இந்த ஹெலிகாப்டரில் 23 ராணுவ வீரர்கள் இருந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் நைரோபியில் புறநகர் பகுதியில் காலை 8 மணி அளவில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்கு உள்ளாகி உள்ளது. திடீரென ஹெலிகாப்டர் தீப்பிடித்து … Read more

வனப்பகுதியில் சென்ற காரை கோபத்துடன் விரட்டிய ஒற்றை யானை..!

வனப்பகுதியில் சென்ற காரை கோபத்துடன் விரட்டிய ஒற்றை யானை. ஆப்பிரிக்க நாட்டின், கென்யா வனப்பகுதியில், அம்பொசெலி தேசிய பூங்காவில், மூவாங்கி கிருபாய் என்பவர் வனப்பகுதியை சுற்றி பார்த்த வண்ணம், விலங்குகளை ரசித்துக் கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஒற்றை யானை ஒன்று, கோபங்கொண்டு ஆக்ரோஷமாக, அவரது காரை விரட்டியுள்ளது. இதனை கிருபாய் காருக்கு முன்பாக சென்ற ஒருவர் படம் பிடித்துள்ளார். அந்த புகைப்படத்தில், அதீத கோபத்துடன், காரை விரட்டும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி … Read more

யானையின் தாயாய் மாறிய வனவிலங்கு காப்பாளர்!

யானையின் தாயாய் மாறிய வனவிலங்கு காப்பாளர். இன்று மனிதனை  மனிதன் நேசிப்பதே கடினமாக தான் காணப்படுகிறது. ஒரு மனிதன் கண்ணீர் விடுவதை களிப்போடு பார்த்து செல்லும் மனிதர்கள் வாழும் உலகில், விலங்குகளை தனது பிள்ளையை போல நேசிக்கும் மனிதர்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்நிலையில், கென்யாவில் யானைக்குட்டி ஒன்று தன் தாயிடம் இருந்து பிரிந்து, வழிதவறி சென்றுள்ளது. தன் தாயை காணாமல் தவித்துவந்த அந்த குட்டி யானை, வனவிலங்கு காப்பாளர் ஒருவர் கண்ணில் பட்டுள்ளது. இந்த … Read more

பலூனை பயன்படுத்தி அதிவேக இன்டர்நெட் திட்டம்.! ரிஃப்ட் பள்ளத்தாக்கு மக்கள் மகிழ்ச்சி.! 

கென்யாவில் உள்ள ரிஃப்ட் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பலூனை பயன்படுத்தி அதிவேக இன்டர்நெட் வழங்கும் திட்டத்தை ஆல்ஃபாபெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் இணையதள வசதி இல்லாத இடங்களே இருக்காது. செல்போன் டவர் மூலம் நகரங்களில் வசிக்கும் மக்கள் இணையதள வசதிகளை பெறுகின்றனர். ஆனால் மலைகிராமங்களிலும், பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இணையதள வசதி கிடைப்பது கடினம். அங்கெல்லாம் செல்போன் டவர் வைப்பதற்கு அதிக செலவாகும். அந்த வகையில் அதுபோன்ற பகுதிகளில் உள்ளவர்கள் இணையதள வசதியை பெற … Read more

கென்யாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் 15 பேர் பலி !

கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடலில் கடற்கரையோரம் உள்ள கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல பகுதியில் வெள்ளநீர் சூழந்து காணப்படுகிறது. இதனால் அங்குள்ள பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளாகி வருகின்றனர். இந்த வெள்ளத்தில் பல வீடுகள் மற்றும் பள்ளி கட்டிடங்கள் இடித்தன. இந்நிலையில், மேற்கு போகட் மற்றும் எல்ஜியோ மர்கட் வெட் மாகாணங்களை இணைக்கும் எல்லை பகுதியில் பெய்த தீவிரமழையால் அங்கு அமைந்துள்ள ஒரு கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த … Read more

கனமழை ..! நிலச்சரிவால் 7 குழந்தைகள் உள்பட 60 பேர் உயிரிழப்பு ..!

கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து  உகாண்டா எல்லையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் உகாண்டா பகுதியில் சாலைகள், கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் பல சேதமடைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி 7 குழந்தைகள் உள்பட 60 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த நிலச்சரிவில் காணாமல் போன 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து வடக்கு மாகாண கவர்னர் ஜான் க்ராப் கூறுகையில் , நேற்று இரவு நடந்ததை … Read more