காரைக்காலில் பெய்து வரும் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை.!

புரேவி புயல் காரணமாக காரைக்காலில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த தாழ்வு மண்டலமானது நேற்று முன்தினம் புரேவி புயலாகி மாறியது .இந்த புரேவி புயல் காரணமாக பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அதிலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . கொரோனா அச்சம் காரணமாக புதுச்சேரியில் 9 முதல் 12 வகுப்பு … Read more

நிவர் புயல் : நாகை மற்றும் காரைக்காலில் ஐந்தாம் எண் புயல் கூண்டு!

நிவர் புயல் நெருங்கி வருவதால், நாகை மற்றும் காரைக்காலில் ஐந்தாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடும் சூறாவளிப் புயலாக உருவாகியுள்ள நிலையில், வருகிற புதன்கிழமை காரைக்கால் மாமல்லபுரம் இடையேயான கரையை இந்த புயல் கடக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி முதல் விசாகப்பட்டினம் வரை உள்ள அனைத்து துறைமுகங்களிலும் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தற்பொழுது … Read more

“நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்”- காரைக்கால் மாவட்ட ஆட்சியர்!

நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13- ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நீட், ஜே.இ.இ. தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்களுக்கு காரைக்காலில் … Read more

இந்து கோவிலுக்கு இஸ்லாமியர் நிலம் வழங்கிய நெகிழ்ச்சி நிகழ்வு.!

காரைக்காலில் ஒரு இஸ்லாமியர் தனது நிலத்தில் கட்டப்பட்டுள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு, தனது நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். காரைக்காலில் உள்ள கீழகாசாகுடி பகுதியில் ஒத்தை பனைமர முனீஸ்வரர் கோவில் உள்ளது. அந்த கோவிலை சுற்றியுள்ள விளை நிலங்களை 35 ஆண்டுகளுக்கு முன்னரே அப்துல்காதர் என்கிற இஸ்லாமியர் விலைக்கு வாங்கிவிட்டார். அந்த சமயத்தில் முனீஸ்வரர் கோவில் சிறிய அளவில் இருந்துள்ளது. அங்கு பக்தர்கள் வந்து வழிபட்டு சென்று வந்துள்ளனர். தற்போது அப்பகுதியில் வீடுகள் அதிகமானதால், முனீஸ்வரர் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் … Read more

கைதிக்கு கொரோனா தொற்று.! காவல்நிலையம் மூடல்.!

திருநள்ளாறு காவல் நிலையத்தில் கைதி ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் அந்த காவல் நிலையம் மூடப்பட்டது.  புதுச்சேரி, திருநள்ளாறு நகராட்சிக்கு உட்பட்ட சுரக்குடியை சேர்ந்த வாகன ஒட்டி ஒருவர் தகராறில் ஈடுபட்டதற்காக திருநாள்ளாறு காவலர்களால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் வசித்து வந்த கிராமம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அவரது குடும்பத்தாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.  மேலும், அவரை … Read more

அதிரடி சோதனை.! போலி மதுபான தொழிற்சாலைக்கு போலீசார் சீல் வைப்பு.!

காரைக்காலில் உள்ள ஒரு வீட்டில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை காவல்துறையினர் கண்டுபிடித்து சீல் வைத்தனர். நூற்றுக்கணக்கான அட்டை பெட்டிகளில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. புதுச்சேரி யூனியனில் காரைக்கால் புறவழிச்சாலை தீன்ஸ் பார்க் பகுதியில் அருகே ஒரு வீட்டில் சட்ட விரோதமான போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருவதாக துணை ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, கலால் மற்றும் காவல்துறையினர், அந்த வீட்டிற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையை … Read more

69 மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்க பட்டனர் : இன்று காரைக்கால் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்

இலங்கை கடற்படைகளால் தமிழக மீனவர்கள் பலர் துன்புறுத்த படுகின்றனர். அவ்வபோது, அவர்கள் கைது செய்யபடுவதும் பிறகு விடுவிக்க படுவதும். இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் 69 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டிசம்பர் 28,29ஆம் தேதிகளில் விடுவிக்கப்பட்டனர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைவரும் இன்று காரைக்கால் கடலில் வந்து சேர்ந்தனர். source : dinasuvadu.com