இந்து கோவிலுக்கு இஸ்லாமியர் நிலம் வழங்கிய நெகிழ்ச்சி நிகழ்வு.!

காரைக்காலில் ஒரு இஸ்லாமியர் தனது நிலத்தில் கட்டப்பட்டுள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு, தனது நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

காரைக்காலில் உள்ள கீழகாசாகுடி பகுதியில் ஒத்தை பனைமர முனீஸ்வரர் கோவில் உள்ளது. அந்த கோவிலை சுற்றியுள்ள விளை நிலங்களை 35 ஆண்டுகளுக்கு முன்னரே அப்துல்காதர் என்கிற இஸ்லாமியர் விலைக்கு வாங்கிவிட்டார்.

அந்த சமயத்தில் முனீஸ்வரர் கோவில் சிறிய அளவில் இருந்துள்ளது. அங்கு பக்தர்கள் வந்து வழிபட்டு சென்று வந்துள்ளனர். தற்போது அப்பகுதியில் வீடுகள் அதிகமானதால், முனீஸ்வரர் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

இதனை கண்ட அப்துல்காதர், கோவில் இருக்கும் அந்த இடத்தினை தானமாக வழங்கினார். புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலையில் நிலத்தின் பட்டவை கோவில் நிர்வாகிகளிடம் அப்துல்காதர் வழங்கினார். ஒரு இஸ்லாமியர் தனது நிலத்தை இந்து கோவிலுக்காக வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை உண்டாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.