” திமுக காங்கிரஸ் எதையும் சாதிக்கப் போவதில்லை ” அமைச்சர் செல்லூர் ராஜீ பேட்டி…!!

ஜெயலலிதா_வின் 71_ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அதிமுக முடிவு செய்துள்ளனர். திமுக காங்கிரஸ் கூட்டணி எதையும் சாதிக்கப் போவதில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா கொண்டாட்ட விழா ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டார். இதில் அதிமுக தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் பிறந்தநாளை எப்படி கொண்டாடுவது என ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜீ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில் … Read more

திமுக யார் முதுகிலாவது சவாரி செய்யும்…அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…!!

சென்னை பட்டினம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார் . இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் தெரிவிக்கையில் , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் தேர்தல் வந்தால் காலகாலமாக தனித்து போட்டியிடுகின்றது .ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்து வருகின்றது என்று திமுகவை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.

நிலவுக்கு மனிதர்கள்….இஸ்ரோ தலைவர் பேட்டி…!!

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன்  ககன்யான் திட்டம் மூலம் 2021ம் ஆண்டு டிசம்பரில் இந்தியர்களை நிலவுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டத்தற்கு சுமார் 10 ஆயிரம் கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.தொடர்ந்து அவர் பேசும் போது டிசம்பர்  2020 மற்றும் ஜூலை 2021 ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்ப தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.