” திமுக காங்கிரஸ் எதையும் சாதிக்கப் போவதில்லை ” அமைச்சர் செல்லூர் ராஜீ பேட்டி…!!

  • ஜெயலலிதா_வின் 71_ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அதிமுக முடிவு செய்துள்ளனர்.
  • திமுக காங்கிரஸ் கூட்டணி எதையும் சாதிக்கப் போவதில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா கொண்டாட்ட விழா ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டார். இதில் அதிமுக தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் பிறந்தநாளை எப்படி கொண்டாடுவது என ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜீ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில் , அதிமுக கூட்டணியை கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த ஒரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் , திமுக காங்கிரஸ் கூட்டணி எதையும் சாதிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment