#BREAKING: தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில், தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. சென்னை டிஎம்சி வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு … Read more

எலி மருந்து, பால்டாயில் விற்பனைக்கு கட்டுப்பாடுகள்.. சாணம் பவுடருக்கு விரைவில் தடை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தனி நபர்களுக்கு எலி மருந்து, பால்டாயில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல சுகாதார நிறுவனத்தில், உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 முதல் 16,000 பேர் தற்கொலையால் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கை விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என கூறினார். தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்பவர்கள் 15 … Read more

தமிழகத்தில் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது – மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் 1.01 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தமிழகத்தில் 5.39 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்து வருகிறது. இந்நிலையில், மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம் என்பதால் தடுப்பூசி போடுவதில் … Read more

மத்திய அரசின் அறிவிப்புக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு..!

கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்த தகவல்களை பொதுத்தளத்தில் வெளியிடக்கூடாது என்று மத்திய அரசு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களிடையே உண்மை நிலையை தெரிவிப்பதுதான் சரியானதாக இருக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தகவல்களை,மாநில அரசுகள் வேறு எந்த நிறுவனத்துடனும்,பொதுவெளியிலும் வெளியிட மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமானது சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளது.அதில், கொரோனா தடுப்பூசி கையிருப்பு தொடர்பான … Read more

தமிழகத்தில் கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மறைக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்,நேற்று ஒரேநாளில் 34,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.எனவே,கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,77,211 ஆக அதிகரித்துள்ளது.மேலும்,நேற்று ஒரேநாளில் 404 பேர் உயிரிழந்த நிலையில்,கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,872ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மறைக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து,அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,”தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றினால் இதுவரை 38 … Read more