மத்திய அரசின் அறிவிப்புக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு..!

மத்திய அரசின் அறிவிப்புக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு..!

  • கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்த தகவல்களை பொதுத்தளத்தில் வெளியிடக்கூடாது என்று மத்திய அரசு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
  • மக்களிடையே உண்மை நிலையை தெரிவிப்பதுதான் சரியானதாக இருக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தகவல்களை,மாநில அரசுகள் வேறு எந்த நிறுவனத்துடனும்,பொதுவெளியிலும் வெளியிட மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமானது சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளது.அதில்,

  • கொரோனா தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தகவல்களை,மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள்,பொதுத்தளங்களிலோ,வேறு எந்த நிறுவனத்துடனோ பகிரக்கூடாது.
  • இது “சென்சிட்டிவ்” டேட்டா ஆகும்.எனவே,அதை மத்திய அரசிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.
  • ஏனெனில்,ஐக்கிய மேம்பாட்டு திட்டத்தின் உதவியுடன் இந்தியாவில் தடுப்பூசிகளின் இருப்பு,அவை பாதுகாக்கப்படும் வெப்பநிலை போன்ற தகவல்களை “இ-வின்” என்ற தளத்தில் மத்திய அரசு சேமித்து வைத்துள்ளது.
  • மத்திய அரசுக்குச் சொந்தமான “இ-வின்” மின்னணு அமைப்பில், கொரோனா தடுப்பூசி பற்றிய விவரங்களை மாநில அரசுகள் நாள்தோறும் பதிவேற்றம் செய்கின்றன.
  • இதில் பதிவு செய்யப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை என்பதால், தடுப்பூசி திட்டத்தை மேம்படுத்த மட்டுமே அந்த தகவல்களை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும்.
  • எனவே,”இ-வின்” மின்னணு அமைப்பில் உள்ள தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலின்றி எந்த நிறுவனத்துடனும் ஊடகங்களுடனும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளக் கூடாது, ஆன்லைனில் வெளியிடக் கூடாது”,என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்த தகவல்களை பொதுத்தளத்தில் வெளியிடக்கூடாது என்று மத்திய அரசு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து,மக்களிடையே உண்மை நிலையை தெரிவிப்பதுதான் சரியானதாக இருக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

மேலும்,இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,

“தடுப்பூசி எண்ணிக்கையை பொதுத்தளத்தில் தெரிவிக்க கூடாது என்று மத்திய அரசின் சுகாதாரத்துறை கூறியுள்ளது.ஆனால்,தடுப்பூசி கையிருப்பு குறித்து தெரிவிக்காமல் இருந்தால் மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியாமல்,தடுப்பூசிக்காக மக்கள் வரிசையில் காத்திருந்து ஏமாறும் நிலை ஏற்படும்.எனவே,தடுப்பூசி குறித்து உண்மை நிலையை மக்களுக்கு சொல்வது தான் சிறந்தது.

மேலும்,தமிழகத்திற்கு இதுவரை 1,01,63,000 தடுப்பூசி டோஸ்கள் வந்துள்ளன.இதனால், 97,62,957 டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இருப்பினும்,தமிழகத்தில் 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை” என்று கூறியுள்ளார்.

Join our channel google news Youtube