மீண்டும் ஹரியானா முதல்வராகிறார் மனோகர் லால் கட்டார்! நாளை பதவியேற்பு!

ஹரியானாவில் நடந்தது முடிந்த சட்ட மன்ற தேர்தலில் 90 இடங்களில் 40 இடங்களில் பாரதிய ஜனதாவும், 31 இடங்களில் காங்கிரசும், 10 இடங்களில் ஜனாயக் ஜனதா தளமும் கைப்பற்றி இருந்தது. ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவை என்பதால் பாரதிய ஜனதா கட்சியானது ஜனாயக் ஜனதா தளத்தின் கூட்டணி பலத்தோடு ஆட்சியமைக்க உள்ளது. இதனை அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் நாளை 2வது முறையாக பிற்பகல் 2.15 மணிக்கு  ஹரியானா முதல்வராக பதவி … Read more

ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி!? பெரும்பாண்மை கிடைக்காவிட்டாலும் உரிமை கோர உள்ள முதல்வர் கட்டார்!

ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தற்போது பெரும்பாலான தொகுதிகளின் ரில்சட் வந்துவிட்டது. இதில் ஆளும் பாஜக 40 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 31 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. ஹரியானாவில் ஆட்சியமைக்க அங்கு உள்ள 90 தொகுதிகளில் 46 தொகுதிகளை கைப்பற்றி இருக்க வேண்டும். ஹரியானாவில் ஜனாயக் ஜனதா தளம் 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. சுயேச்சையாக 6 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். 1  தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.  மற்ற கட்சிகள் 2 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளன. ஆதலால், ஹரியானாவில் … Read more

யாருக்கும் பெரும்பான்மை இல்லை! மீண்டும் இழுபறியில் ஹரியானா!

கடந்த 21ஆம் தேதி ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதன் ரிசல்ட் தற்போது  வந்துகொண்டிருக்கிறது.இதில் மஹாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து  வருகிறது. இதானால் அங்கு பாஜக – சிவசேனா கூட்டணி  வெற்றியை உறுதி செய்து வருகிறது. ஆனால் ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அம்மாநிலத்தில் ஆட்சியமைக்க 49 தொகுதிகள் பெரும்பான்மை பெற வேண்டிய சூழலில், பாஜக 35 தொகுதிகளிலும் காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் … Read more

இழுபறியில் ஹரியானா! பாஜக கூட்டணி ஆட்சியா? காங்கிரஸ் கூட்டணி ஆட்சியா?!

கடந்த 21ஆம் தேதி ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதன் ரிசல்ட் தற்போது  வந்துகொண்டிருக்கிறது.இதில் மஹாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து  வருகிறது. இதானால் அங்கு பாஜக – சிவசேனா கூட்டணி  வெற்றியை உறுதி செய்து வருகிறது. ஆனால் ஹரியானாவில் உள்ள 90சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை 89 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன அதில் ஆட்சியமைக்க 49 தொகுதிகள் பெரும்பான்மை பெற வேண்டிய சூழலில், பாஜக 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் … Read more

ஹரியானா , மகாராஷ்டிரா காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்..!

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி ஹரியானாவில் 8.73% வாக்கு பதிவு நடைபெற்று உள்ளது.மகாராஷ்டிராவில் காலை 9 மணி நிலவரப்படி 5.46% வாக்கு பதிவாகி உள்ளது.

ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இன்று தேர்தல்

ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இன்று (அக்டோபர் 21-ஆம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் 288 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.இங்கு பாஜக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.மேலும் ஹரியானாவில்  90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.ஹரியானாவில் பாஜக-காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. இதற்காக  இந்த இரண்டு மாநிலங்களிலும்  காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தது.ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது.இரண்டு … Read more

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் விரும்பவில்லை- பிரதமர் மோடி

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் விரும்பவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஹரியானா தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது .அரசின் திட்டத்தால் நீருக்காக வானிலையை நம்பியிருக்க வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்படாது . மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் விரும்பவில்லை என்றும் சட்டப்பிரிவு 370 ரத்து … Read more

திடீரென்று ரத்தானது சோனியா காந்தியின் பரப்புரை

ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ,பாஜக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து உள்ளது.தற்போது அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஹரியானா மாநிலம் மகேந்தரகரில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் தற்போது … Read more