குஜராத் தேர்தலில் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஜடேஜா மனைவி.!

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா  மனைவி ரிவாபா ஜடேஜா 77 ஆயிரம் வாக்குகளை தாண்டி பெற்று சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். குஜராத் சட்டசபை தற்போது பாஜக வசமாக மீண்டும் மாறியுள்ளது. தொடர்ந்து 7வது முறையாக பிரமாண்ட வெற்றியை பாஜக பெற்றுவருகிறது. தற்போது ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியும் உறுதியாகி வருகிறது. அந்த வகையில் ஜாம்நகர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா  … Read more

இரு மாநில தேர்தல் முடிவுகள்.! பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை.!

தேர்தல் முடிவுகள் வருவதை ஒட்டி பாஜக மூத்த நிர்வாகிகளுடன் டெல்லில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.   குஜராத் தேர்தல் சட்டசபை முடிவுகள் வெளியாகி பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். குஜராத்தில் தொடர்ந்து 7வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இலுபறி இருந்து வருகிறது. இதனால் இமாச்சல பிரதேசத்தில் யார் ஆட்சியை கைப்பற்றுவார் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து … Read more

குஜராத் தேர்தல் : ஜடேஜாவின் மனைவி தொடர்ந்து முன்னிலை.!

குஜராத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.  குஜராத்தில் தொடர்ந்து பாஜக பெரும்பான்மையுடன் முன்னேறி வருகிறது. இதனை பாஜகவினர் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இதில் பாஜக 149 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 9 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதில், ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா போட்டியிட்டு … Read more

குஜராத் தேர்தலிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும் – பஞ்சாப் முதல்வர்

குஜராத் தேர்தலில் கருத்து கணிப்புக்களை பொய்யாக்கி ஆம் ஆத்மி வெற்றி பெறும் என பஞ்சாப் நம்பிக்கை. டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134 இடங்களை பிடித்து அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. இது சாதாரண வெற்றி மட்டும் இல்லாமல், டெல்லி மாநகராட்சியில் பாஜகவின் 15 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது. இந்த நிலையில், குஜராத் தேர்தலில் கருத்து கணிப்புக்களை பொய்யாக்கி ஆம் ஆத்மி வெற்றி பெறும் … Read more

குஜராத்தில் அடுத்த ஆட்சி யாருடையது.? இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நிறைவு! 67% வாக்குகள் பதிவு!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு. நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் அடுத்து யார் ஆட்சி கட்டிலில் அமர போகிறார்கள் என எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதுவரை குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது டெல்லி, பஞ்சாபை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் களத்தில் உள்ளது. இதனால் அங்கு … Read more

#Gujaratelection2022: குஜராத்தில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு – வாக்களித்தார் பிரதமர் மோடி!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்காக அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார். குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. முதற்கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், சுமார் 2.39 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதனைத்தொடர்ந்து, குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான (இரண்டாம் கட்டம்) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக … Read more

குஜராத் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 48.48% வாக்குகள் பதிவு!

குஜராத்தில் முதற்கட்ட தேர்தலில் 8 மாவட்டங்களில் 50%-க்கும் மேல் வாக்குகள் பதிவு என தகவல். நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், இன்று 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. முதற்கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக , காங்கிரஸ்,  ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. இன்று … Read more

குஜராத்தில் மும்முனை போட்டி! முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம். நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று தொடங்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் இதுவரை பாஜக , காங்கிரஸ் என இருமுனை போட்டி நிலவி வந்த நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி களமிறங்கியதால் மும்முனை போட்டியாக மாறியுள்ளது. மூன்று கட்சிகளும் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ள நிலையில், இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி … Read more

#CNG-PNG: நெருங்கும் தேர்தல் – குஜராத்தில் எரிவாயு மீதான வரி குறைப்பு!

குஜராத்தில் தேர்தலுக்கு முன்பாக எரிவாயு மீதான வரிகளை குறைத்துள்ளது பாஜக தலைமையிலான அரசு.  விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநிலத்தில் சமையல் எரிவாயு மற்றும் வாகன எரிவாயு மீதான வரியை குறைத்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வாகனங்களின் பயன்படும் சிஎன்ஜி மற்றும் வீடுகளுக்கு குழாய் மூலம் விநியோகம் ஆகும் எரிவாயு மீதான வாட் வரி 10% குறைக்கப்பட்டுள்ளது.  குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய நிலையில், இமாச்சலப்பிரதேசத்துக்கு … Read more