குஜராத் தேர்தல் : ஜடேஜாவின் மனைவி தொடர்ந்து முன்னிலை.!

குஜராத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். 

குஜராத்தில் தொடர்ந்து பாஜக பெரும்பான்மையுடன் முன்னேறி வருகிறது. இதனை பாஜகவினர் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இதில் பாஜக 149 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 9 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இதில், ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா போட்டியிட்டு இருந்தார். ஆரம்பத்தில் கொஞ்சம் பின்னடைவில் தொடங்கினாலும், தற்போது அவர் முன்னேறி வருகிறார். இரண்டாம் இடத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரும், 3ஆம் இடத்தில் காங்கிரஸ் வேட்பாளரும் இருக்கின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment