செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் இதை செய்யாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு – பஞ்சாப் அரசு அறிவிப்பு..!

செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிய நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.அந்த வகையில் கொரோனா பரவலிலிருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி போடும் பணிகள்  கட்டாயமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலயில்,பஞ்சாப் அரசு ஊழியர்கள் மருத்துவ காரணங்கள் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் கொரோனா தடுப்பூசியின் … Read more

அரசு ஊழியர்களுக்கான முக்கிய செய்தி… குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்வு – தமிழக அரசு அரசாசாணை வெளியீடு…!

அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும்,மேலும், மாத பிடித்தம் ரூ.110 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது: “தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பட்ஜெட் உரையில் 13-08-2021 அன்று இறக்கும் ஒரு … Read more

#Breaking:அரசு ஊழியர்கள் புதிய மருத்துவ காப்பீடு – இன்று முதல் அமல்..!

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்து விட்டது.எனவே,கொரோனா காரணமாக காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில்,அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று முதல் 2025 ஜூன் 25 ஆம் தேதி வரை நான்கு ஆண்டு காலத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,தமிழ்நாடு அரசு ஊழியர்கள்,குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை … Read more

#அறிவிப்பு- அரசு ஊழியர்களில் இவர்களுக்கு மட்டும் 6 நாட்கள் தற்செயல் விடுப்பு!

 சிறப்பு குழந்தைகளை வைத்திருக்கின்ற அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சாதாரண விடுப்பு எடுக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதத்தில் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை மானியக்கோரிக்கையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது  குறித்து பேசியதாவது: சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்கள் அக்குழந்தைகளின் நலன்களை பராமரிக்க மேற்கொள்ளுகின்ற சிரமத்தை குறைக்கும் நோக்கோடு அத்தகைய குழந்தைகளின் பெற்றோர்களாக இருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் … Read more

மாதம் 6 நாட்கள் வீதம், 5 மாதங்களுக்கு சம்பளம் பிடித்தம் – கேரள முதல்வர் முடிவு.!

கேரளாவில் பொருளாதார நெருக்கடியை ஈடுகட்டும் வகையில், அரசு ஊழியர்களுக்கு மாத  ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் இந்திய பொருளாதாரம் கடும் சரிவை கண்டுள்ளது. இதனை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பிரதமரின் நிவாரண நிதி மற்றும் மாநில முதல்வர்களின் பொது நிவாரண நிதி மூலம் நன்கொடை திரட்டப்பட்டு வருகிறது. கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தங்களது பங்களிப்பை வழங்கும் வகையில் அனைத்து தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். … Read more

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் சிறப்பு விடுமுறை அறிவிப்பு !

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  அரசு ஊழியர்கள் புற்று நோய்க்கு ஹீமோ தெரபி மற்றும் ரேடியோ தெரபி சிகிச்சை பெற ஊதியத்துடன் கூடிய பத்து நாள்கள் விடுமுறை  வழங்கப்படும் என பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார்  சமீபத்தில் நடந்த மானிய கோரிக்கை என்று தெரிவித்தார். இந்நிலையில் இந்த விடுப்பு வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழக அரசு ஆணையின்படி அரசு ஊழியர்கள் ஒவ்வொரு முறையும் புற்று நோய் தொடர்பாக சிகிச்சை பெற போகும் … Read more