கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் மக்களுக்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும் …! அமைச்சர் விஜயபாஸ்கர்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் மக்களுக்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,  அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை உடனே கைவிட வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் மக்களுக்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும். அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும்  என்றும்  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ முகாம்கள் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்….உணவுத்துறை அமைச்சர் காமராஜ்…!!

மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். திருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கஜா புயல் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்காக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த முகாம்கள் மூலம் 2 லட்சத்திற்கும் … Read more

பாகுபாடு இல்லாமல் நிவாரண பணிகள் -அமைச்சர் ஓ.எஸ்.மணியன்…!!

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகை, விரைவில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இரண்டாம்சேத்து மற்றும் வல்லம் கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அனைத்து கிராமங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதாகவும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதி விரைவில் … Read more

கனமழை எதிரொலி…! புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!

கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்  கூறுகையில்,  அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.நாளை மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையியில் கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் கேசவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல்  புதுக்கோட்டை மாவட்டத்தில் … Read more

கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் …!அமைச்சர் கே.சி.வீரமணி

கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று  அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அமைச்சர் கே.சி.வீரமணி கூறுகையில்,  கஜா புயலால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் . கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும்   அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

மொத்தம் ரூ.206 கோடி மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள் சேதம்…!அமைச்சர் ஜெயக்குமார்

மொத்தம் ரூ.206 கோடி மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளது  என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக   அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், மத்திய அரசிடம் நாங்கள் கேட்டுள்ள நிதி வந்தால், மீனவர்கள் கேட்கும்படி நிவாரண நிதி உயர்த்தி வழங்கப்படும்.மொத்தம் ரூ.206 கோடி மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளது என்றும்   அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கடட்டணம் ரத்து …!முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை…!அமைச்சர் தங்கமணி

புயல் பாதித்த பகுதிகளில் ஒரு வாரத்தில் 100% மின்விநியோகம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில்,கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கடட்டணத்தை ரத்து செய்வது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். மின் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க முடியாவிட்டாலும், அவர்களின் கூலியை உயர்த்துவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும். புயல் பாதித்த பகுதிகளில் ஒரு வாரத்தில் 100% மின்விநியோகம் வழங்கப்படும்

இன்று நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!

நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கஜா புயலில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக நாகப்பட்டினம் மாவட்டம் உள்ளது.மேலும் மாவட்டத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவாதலும்,மக்கள் பள்ளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு சீரமைப்பு பணிகள் தொடர்கிறது மின்சார உள்ளிட்ட தேவைகள் தற்போது வரை முழுமையாக சரிசெய்யப்படாத நிலையில் நாகை மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும், நிவாரண முகாம்கள் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுவதாக ஆட்சியர் சுரேஷ் அறிவித்துள்ளார்.

கஜா புயல் நிவாரணம்…! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்ரூ.10 லட்சம் நிதியுதவி …!

கஜா புயல் நிவாரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில்ரூ.10 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கஜாபுயல் நிவாரண நிதிக்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.அதேபோல் கஜா புயல் நிவாரணத்திற்கு, தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேரும் ஒருமாத சம்பளத்தை, முதலமைச்சரை சந்தித்து வழங்கினார்கள்.

கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்…! ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் அறிவிப்பு …!

கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட புதுச்சேரி பல்கலைகழக தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் வீடுகள்,கால்நடைகள்,மனித உயிரிகளும் மற்றும் மரங்களும் பலத்த சேதமடைந்தது. இந்நிலையில் கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட புதுச்சேரி பல்கலைகழக  தேர்வுகள் டிசம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று  புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .