கஜா புயல், இயற்கை நம்மீது கொடுத்த போர்…!வைரமுத்து

 கஜா புயல் நிவாரணம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் அறிவர் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சையில் வைரமுத்து கூறுகையில்,  கஜா புயல், இயற்கை நம்மீது கொடுத்த போர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் .கஜா புயல் நிவாரணம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் அறிவர்.கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிட்டிருந்தால் அதிக நிவாரண நிதி கிடைத்திருக்கும்.மேகதாது பிரச்னையை சர்வதேச பிரச்னையாக … Read more

மேகதாது மற்றும் கஜா புயல் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது …!திருமாவளவன்

மேகதாது மற்றும் கஜா புயல் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக   விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக வேண்டும், சாதி ரீதியாக அணுக முடியாது .மேகதாது மற்றும் கஜா புயல் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில்  முதலமைச்சர் பழனிசாமி நேரடியாக பிரதமரை சந்தித்து இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் … Read more

கஜா புயல் பாதிப்பு…! அடுத்த ஒரு வாரத்திற்குள் மின்சீரமைப்பு பணி நிறைவடையும்…!அமைச்சர் தங்கமணி

படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மின்சாரத்துறை  அமைச்சர் தங்கமணி  கூறுகையில்,  இதுவரை 1000 கடைகள் மூடப்பட்டுள்ளது, படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.கஜா புயல் பாதித்த அனைத்து பகுதிகளிலும், அடுத்த ஒரு வாரத்திற்குள் மின்சீரமைப்பு பணி நிறைவடையும்.அடுத்த 5 ஆண்டுகளில் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாகை நகர்ப்புற பகுதிகளில் முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது…! அமைச்சர் தங்கமணி

நாகை நகர்ப்புற பகுதிகளில் முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில்,  தமிழகத்தில் 2023-ம் ஆண்டு 4 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விளை நிலங்கள் வழியாக மின்பாதை அமைக்கும் போது சில அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் போராட்டத்தை தூண்டிவிடுகின்றது.நாகை நகர்ப்புற பகுதிகளில் முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும்  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் நிவாரணத்திற்காக முதலமைச்சரிடம் குவியும் உதவிகள்…!!

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு தரப்பினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நிவாரண நிதியை வழங்கினர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க பல்வேறு தரப்பினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கூட்டுறவு வங்கிகளின் சார்பில், 6 கோடி ரூபாய்க்கான வரைவோலையை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, … Read more

கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை …! அமைச்சர் உதயகுமார்

கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை அருகே திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை. மத்தியஅரசில் இருந்து ஒரு ரூபாய் கூட வரவில்லை என்றாலும் தமிழக அரசு ரூ.1,400கோடிக்கு நிவாரண நிதி வழங்கியது என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த  அவகாசம் வழங்கியுள்ளது மின்வாரியம். தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் ,புதுக்கோட்டை , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர்,புதுக்கோட்டை மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த  அவகாசம் வழங்கியுள்ளது மின்வாரியம். … Read more

 தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க அறிக்கை மூலம் பரிந்துரை செய்யப்படும்..!மத்திய தோட்டக்கலைத்துறை இணை செயலாளர்

தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க அறிக்கை மூலம் பரிந்துரை செய்யப்படும் என்று மத்திய தோட்டக்கலைத்துறை இணை செயலாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய தோட்டக்கலைத்துறை இணை செயலாளர் தினேஷ் குமார் கூறுகையில்,கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்விற்கு மத்திய அரசு துணை நிற்கும் .பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்புக்காக மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க அறிக்கை மூலம் பரிந்துரை செய்யப்படும் என்றும்  மத்திய தோட்டக்கலைத்துறை இணை செயலாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்து மனம் கலங்கிய இயக்குனர் சசிகுமார்….!!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பலரும் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சசி குமார் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்றும் ஆறுதலாக பார்த்து பேசியுள்ளார். இதனையடுத்து, இவர் அங்குள்ள மக்களை பார்த்து 2 வாரம் கழித்து வந்து பார்க்கும் எனக்கே இவ்வளவு கவலையாக உள்ளது. எப்படியம்மா இதெல்லாம் தாக்கிக்கிட்டிங்க என்று கேட்டுள்ளார். மேலும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நடந்து சென்றே பார்த்துள்ளார். இந்நிலையில், ஒரு … Read more

பிரதமர் மோடி கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டிப்பாக பார்வையிட வருவார் : தமிழிசை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரமோடி கண்டிப்பாக வருவார் என தமிழிசை கூறியுள்ளார். சென்னையில் பேட்டியளித்த தமிழிசை பிரதமரின் பிரதிநிதிகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களை சந்தித்துள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி கண்டிப்பாக வருவார் என கூறியுள்ளார்.