கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதுரை அருகே திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை. மத்தியஅரசில் இருந்து ஒரு ரூபாய் கூட வரவில்லை என்றாலும் தமிழக அரசு ரூ.1,400கோடிக்கு நிவாரண நிதி வழங்கியது என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.