கோமாரி நோயால் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் இறப்பு -விவசாயிகள் வேதனை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தாழாக்குடி, வெள்ளமடம், செண்பகராமன் சுற்று வட்டார பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசு மாடுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 35 வருடங்களுக்கு பிறகு தற்போழுது இப்பகுதியை சேர்ந்த பசு மாடுகள் மற்றும் கன்றுகளை கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பசுகள் மற்றும் கன்றுகள் இறந்திருப்பதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் அதிகமான மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் உள்ளது.
பசுகள் கோமாரி நோய் பாதிப்புக்குள்ளானதால் பால் உற்பத்தியும் பெரும் அளவு குறைந்துள்ளது. இதனால் கோமாரி நோயை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment