தூத்துக்குடியில் கனமழை எதிரொலி : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக விடாது கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களில் உள்ள மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்படுவதுடன், பலரது குடியிருப்புகளுக்குள்  வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் உறங்குவதற்கு கூட இடமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முத்தம்மாள் காலணியிலுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வெளியேறுவதற்கு படகுகளை … Read more

பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் திறப்பு..வெள்ளப்பெருக்கு அச்சத்தால் மக்கள் வெளியேற்றம்.!

பேச்சிப்பாறை அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு, வெள்ளப்பெருக்கு அபாயத்தால் மக்கள் வெளியேற்றம். குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தற்போது, வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் மழைபெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய இரு … Read more

ஒடிசாவில் அடுத்த வாரம் கன மழை பெய்ய வாய்ப்பு..வெள்ள அபாய எச்சரிக்கை.!

அடுத்த வாரம் ஒடிசா மாநிலத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய குறைந்த காற்றழுத்த பகுதி வங்காள விரிகுடாவில் உருவாகிறது. இதனால், அடுத்த வாரம் தொடக்கத்தில் ஒடிசாவின் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. இந்நிலையில், இந்த முன்னறிவிப்பைத் தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் சமாளிக்க முழுமையான எச்சரிக்கையாக இருக்குமாறு மாநில அரசு அந்தந்த மாவட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டது. இந்த, … Read more

வியட்நாம் கனமழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலி!

வியட்நாமில் பெய்துவரும் கனமழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய வியட்நாம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 7 பேர் இன்னும் காணவில்லை, என்று இயற்கை பேரிடர் மையம் தெரிவித்துள்ளது. 900 ஹெக்டேர் நெல் … Read more

பீகாரில் வெள்ளத்தால் 16 மாவட்டங்களில் 82. 92 லட்சம் பேர் பாதிப்பு..27 பேர் உயிரிழப்பு – பேரிடர் மேலாண்மை

பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 16 மாவட்டங்களில் 83 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரில் மாநிலத்தில் தர்பங்கா மற்றும் முசாபர்பூர் ஆகிய இரு மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தன. கோபால்கஞ்ச் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பீகாரில் வெள்ள நிலைமை நேற்று கடுமையாக இருந்தது, கடந்த 24 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கூடுதலாக 1.13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 82. 92 லட்சம் என்று பேரிடர் மேலாண்மைத் துறை … Read more

நாடு முழுவதும் உள்ள 11 மாநிலங்களில் பெய்த மழையால் 868 பேர் உயிரிழப்பு.!

நாடு முழுவதும் உள்ள 11 மாநிலங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 868 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர். நாடு முழுவதும் பல இடங்களில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. குஜராத், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது. மேலும், பீகார், அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயாவில் உள்ள சில பகுதிகளில் ஜூலை மாதத்தில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனையடுத்து கர்நாடகா மும்பை, கொங்கன் மற்றும் ராஜஸ்தானில் பெய்த மழையால் பல … Read more

கொரோன,வெள்ளங்களுக்கு மத்தியில் 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு.!

கொரோனா தொற்று, வெள்ளங்களுக்கு மத்தியில் 7 மாநிலங்களின் முதல்வர்களை பிரதமர் மோடி அழைத்தார். பீகார், அசாம், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் முதலமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி அழைக்கிறார். பிரதமர் மோடி நேற்று ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பேசி கொரோனா வைரஸ் மற்றும் வெள்ள சூழ்நிலைகள் குறித்து விவாதித்தார். அந்த வகையில் பீகார், அசாம், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் முதலமைச்சர்களை அவர் அழைத்தார். இந்த மாநிலங்களில் சில  … Read more

ஜப்பானில் வெள்ளம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 66 ஐ எட்டியுள்ளது!

ஜப்பானில் அதிக மழை பொழிவில் ஏற்பட்ட வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானில் அண்மையில் பெய்த கனமழையால் அங்கு அதிகப்படியகியான வெள்ளப்பெருக்கு வந்ததுடன், அநேக மக்களும் பாதிக்கப்பட்டனர். பொருளாதாரங்கள் அணைத்து சீர்குலைந்த நிலையில் உள்ளது ஜப்பான். இந்நிலையில், இதுவரை வந்த வெள்ளப்பெருக்கு அழிவில் நேற்று அதாவது வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 66 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 16 பேர் காணாமலும் போயுள்ளனர். இன்னும் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதால் காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீவிரம் … Read more

மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் சேதங்களை மதிப்பீடு செய்து நிவாரணம் வழங்கப்படும்-முதலமைச்சர் பழனிசாமி

கோவையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டால் முக்கொம்பு கதவணையில் பாதிப்பு ஏற்படாது. முக்கொம்பு கதவணையில் 71 கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ள பாதிப்புகள் மற்றும் நிலச்சரிவு குறித்து துணை முதலமைச்சர் விரிவாக ஆய்வு செய்ய உள்ளார் .விளம்பரத்திற்காகவே ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றார் ஆனால், அமைச்சர்கள் பாதிப்பு நடந்த அடுத்த நாளே அங்கு முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டார்கள்.மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் … Read more

இந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கி 43 பேர் பலி : 21பேர் படுகாயம் !!

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பப்புவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில்  சென்டானியில் கனமழை பெய்தது. வெள்ளத்தில் 42 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.கடந்த ஜனவரி மாதம் சுவாவேசித் தீவில் மழை மற்றும் நிலச்சரிவால் 70 பேர் உயிரிழந்தனர்.  இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பப்புவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில்  சென்டானியில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் வெள்ளத்தில் 42 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் 21 … Read more