வியட்நாம் கனமழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலி!

வியட்நாமில் பெய்துவரும் கனமழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய வியட்நாம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 7 பேர் இன்னும் காணவில்லை, என்று இயற்கை பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.
900 ஹெக்டேர் நெல் வயல்களும், 5500 க்கும் அதிகமான பயில் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், 4.45 லட்சத்துக்கும் அதிகமான கால்நடை விலங்குகள் வெள்ளத்தில்அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அக்டோபர் 21ம் தேதி வரையிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
author avatar
Rebekal