உலகின் உயரமான வாக்கு மையம்.! இமாச்சலில் 15,200 அடி உயரத்தில் இன்று வாக்குபதிவு.!

இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக, 15,200 அடி உயரமுள்ள உலகின் மிக உயரமான வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள தாஷிகாங்கில் உலகின் மிக உயரமான வாக்குச் சாவடியை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இந்த வாக்குச்சாவடி 15,256 அடி உயரத்தில் அமைந்துள்ளதாக இமாச்சலின் தலைமை நிர்வாக அதிகாரி விடியோவை பகிர்ந்துள்ளார். இந்த மாவட்டத்தில் உள்ள 52 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்காக இங்கு இந்த உயரமான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மூத்த … Read more

ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டி.! சட்டத்தை மாற்ற மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை.!

ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்க  மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.   நம் நாட்டில் நடைபெறும் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அதே  தேர்தலில் வேறு இடத்திலும் போட்டியிடலாம். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்து விடுவர். அதனால் அந்த பகுதிக்கு மீண்டும்  தேர்தல் நடைபெறும். பெரும்பாலும், அரசியல் முக்கிய தலைவர்கள் தங்களது தோல்வியை தவிர்க்க இரு தொகுதிகளில் … Read more

ஆகஸ்ட் 1-ஆம் தேதி அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை..! அதிமுக சார்பில் யாருக்கு அழைப்பு..?

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆக.1-ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இதனையடுத்து, இக்கூட்டத்தில் கலந்து … Read more

#BREAKING: இந்திய தேர்தல் ஆணையத்தை நாடினார் ஓபிஎஸ்!

இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பில் வழக்கறிஞர்கள் மனு தாக்கல்.  டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். பொதுக்குழு நேற்று நடைபெற்ற நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், … Read more

ஜார்கண்ட் முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…! என்ன காரணம்…?

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ். இந்திய தேர்தல் ஆணையம், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நோட்டீஸ்  அனுப்பியுள்ளது. அரசு சுரங்கம் ஒப்பந்தத்தை தனக்கு ஆதரவாக பயன்படுத்தியதாக புகார் வந்ததையடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டிஸில், தகுதி நீக்க நடவடிக்கையை ஏன் மேற்கொள்ள கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து ஹேமந்த் சோரன் விளக்கம் அளிக்க கோரியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#BREAKING: இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்..!

மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெறவுள்ள  இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளுக்கும் , சத்தீஸ்கர், பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய  மாநிலங்களில் தலா 1 தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த அனைத்து இடங்களுக்கும் ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 24-ஆம் தேதி கடைசி நாளாகும். அதே சமயம், … Read more

#BREAKING: காலியாகவுள்ள 13 எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிப்பு..!

ராஜ்யசபா உறுப்பினர்களான ஆனந்த் சர்மா, ஏ.கே. ஆண்டனி, பர்தாப் சிங் பாஜ்வா, நரேஷ் குஜ்ரால் என பல தலைவர்கள் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளதால் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், கேரளா, அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாகவுள்ள எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, பஞ்சாபில் 5, கேரளாவில் 3, அசாமில் 2, ஹிமாச்சலப் பிரதேசம், திரிபுரா மற்றும் நாகாலாந்தில் தலா ஒரு இடங்கள் காலியாகவுள்ளது. இதனால்,  … Read more

#BREAKING: 1,650 பறக்கும் படைகள் அமைப்பு – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. ஒரு மாநகராட்சி ஒரு … Read more

தமிழகத்தில் 11ம் தேதி வரை பேரணிக்கு தடை? – மாநில் தேர்தல் ஆணையம் முடிவு!

தமிழகத்தில் 11ம் தேதி வரை பேரணிக்கு தடை விதிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் … Read more

#BREAKING: 5 மாநில தேர்தல்: பிப்ரவரி 11 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..!

பிப்ரவரி 11 வரை ஊர்வலம், மிதிவண்டி பேரணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரகாண்டில் 70 சட்டசபை தொகுதிகளுக்கு , கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதியும், பஞ்சாப்பில் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 20-ஆம் தேதியும், மணிப்பூரில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் … Read more