அய்யா வைகுண்டர் தலைமை பதியில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு வருகை தந்தார். அங்கு அவர் பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் அய்யா வைகுண்டர் தலைமை பதி உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு … Read more

இபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி.! கோவை தர்காவில் சிறப்பு பிரார்த்தனை.!

எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என கோவை தர்காவில் அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.  முன்னாள் முதல்வர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணியில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என கோவையில் ஒரு தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனையில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய அதிமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த சிறப்பு பிரார்த்தனையில் … Read more

அரசின் அந்த ஒரு அரசாணையால் தொழிலாளர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.! -இபிஎஸ் விமர்சனம்.!

தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்ற அரசாணைக்கு எதிராக தனது கருத்தை பதிவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றி சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், ‘ தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்ற அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையை … Read more

2 நாள் மழைக்கே இற்றுப்போனது தமிழகம்.! திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்.!

2 நாள் மழைக்கே இற்றுப்போன தமிழ்நாடு. வாய்ச்சொல் வீரர்களால் அல்லலுறும் பொதுமக்கள் என ஆளும் திமுக அரசை விமர்சித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அவர் குறிப்பிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேட்டியில், அம்மா ஆட்சியில் 10 ஆண்டுகளில் நிறைவேற்றாததை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றி விட்டதாக கூறினார். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சில திட்டங்களில் ஒரு சிலவற்றை தொடர்ந்து செய்துவிட்டு தாங்கள் செய்ததாக குறிப்பிடுகிறார்கள் என தான் வெளியிட்டுள்ள … Read more

‘அம்மா வளாகம்’ பெயர் மாற்றப்படவில்லை“ – அமைச்சர் தங்கம் தென்னரசு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம். மறைந்த திமுக மூத்த தலைவரும், அமைச்சராகவும் பணியாற்றிய பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி, இன்று சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் பேராசிரியர் க.அன்பழகனின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்திற்கு பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என்று பெயர் சூட்டினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் இருந்த அம்மா வளாகத்திற்கு மறைந்த … Read more

கோடநாடு வழக்கு – எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

கோடநாடு வழக்கில் ஈபிஎஸ், சசிகலா ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்ற வழக்கு விசாரணை ஒத்திவைப்பு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை விவகாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோரை விசாரிக்க கோரிய வாழ்க்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து. விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று 4 வாரத்துக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, … Read more

திமுகவினர் பச்சை பொய்யை கூறி வருகிறார்கள் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

இந்த 4 மாத காலத்தில் திமுக அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்ற வில்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் ஊரக உள்ளாட்சி நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அதிமுக சார்பில் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றி வருகிறார். … Read more

விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்களை மு.க.ஸ்டாலின் ஏமாற்றி விட்டார் – எடப்பாடி பழனிசாமி

தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியது திமுக என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு. ஊரக உள்ளாட்சித் தேர்தளையொட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள சென்ற இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் இன்று காலை உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை, தேர்தல் நேரத்தில் அளித்த அறிவிப்புகளும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகள், … Read more

எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிப்போம்.., அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு – ஈபிஎஸ் பேச்சு

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டு போயுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில், அதிமுக கொண்டுவந்த பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டதாகவும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏதாவது ஒரு கரணம் … Read more

#BREAKING: அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் நியமனம் செல்லும் – உயர்நீதிமன்றம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நியமனத்தை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு. அதிமுக கட்சி விதிகளின் படி, புதிய பதவிகளை உருவாக்குவதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது, பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. ஆனால் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதன்பின் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிகலா நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டார்கள். இது அதிமுகவின் விதிகளுக்கு முரணானது என்றும் மறைந்த … Read more