கேலக்ஸி ஜே3 : ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவுடன் களமிறங்குகிறது

  மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் சாம்சங் நிறுவனம் விரைவில் பட்ஜெட் விலையில் இந்த கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்படும் என  தகவல் தெரிவித்துள்ளது. கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போன் மாடல். … Read more

ட்ரம்ப் அதிரடி : வரி உயர்வு !!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  உள்நாட்டு தொழிலை காப்பாற்றும் நோக்கில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினயத்திற்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தியுள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதலே உள்நாட்டு தொழிலாளர்களை பாதுக்காக்கவும், உள்நாட்டு தொழில்களை காக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக எச் -1 பி விசா நடைமுறைகளை கடுமையாக்கினார். இதை தொடர்ந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமனியத்தை பாதுகாக்கவும், இறக்குமதியை தடுக்கும் பொருட்டும், … Read more

இந்தியாவிற்கு உதவ அமெரிக்கா மறுப்பு ?

அமெரிக்காவில் நீரவ் மோடி இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த இயலாது என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கி மூலம் முறைகேடாக கடன் உத்தரவாதப் பத்திரங்களைப் பெற்று, 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் மோசடி செய்த வழக்கில், வைரநகைத் தொழிலதிபர் நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல்சோக்சி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் பெரிதாக உருவெடுப்பதற்கு முன்னரே, வெளிநாடு சென்றுவிட்ட நீரவ் மோடி, நியூயார்க்கில் இருப்பதாக … Read more

சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிப்பு !!!

  மதுரை கோட்டம் சாா்பில் திருநெல்வேலி, செங்கோட்டையில் இருந்து கோடை கால சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோடை கால விடுமுறையை முன்னிட்டு தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் சாா்பில் சிறப்பு கட்டண ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு கட்டண ரயில்கள் ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி, ஜூலை 1ம் தேதி வரை இயக்கப்படுகின்றன. அதன்படி ஏப்ரல் 8ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 6.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.30 மணிக்கு … Read more

ரிங் நிறுவனத்தினை வாங்குகிறது அமேசான்

  ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்டா டோர் பெல்லினை ரிங் என்னும் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த பெல் ஆனது ஒருவர் வீட்டில் இருக்கும்போதோ அல்லது வெளியே இருக்கும்போதோ வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு பதிலளிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பெல்லினை உருவாக்கிய ரிங் நிறுவனம் தற்போது தனது முதலீட்டினை 209 மில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனத்தினை வாங்குவதற்கு அமேசான் நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்காக 1 பில்லியன் டாலர்கள் பேரம் பேசப்பட்டுள்ளது கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் … Read more

அருண் ஜெட்லி அதிரடி : மத்திய அமைச்சரவையின் புதிய சட்டம் !

மத்திய அமைச்சரவையின் புதிய சட்டம் : பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஒப்புதல் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கிய மத்திய அமைச்சரவை கூடத்தில், வங்கி மோசடி, வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருத்தல் போன்ற பொருளாதார குற்றங்கள் செய்து வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் புதிய மசோதாவுக்கு  இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவுக்கு, “தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சொத்து பறிமுதல் மசோதா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் … Read more

சி.பி.ஐ. சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனு!

சி.பி.ஐ. சார்பில், அன்னிய முதலீட்டு நிதி மோசடி வழக்கில்  கார்த்தி சிதம்பரத்திற்கு 14 நாட்கள் போலீஸ் காவல் வழங்கக் கோரி  மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் 2007-ல் வெளிநாட்டிலிருந்து 300 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற்றது. உரிய அனுமதியின்றி பெறப்பட்ட இந்த முதலீடு தொடர்பாக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் உள்ள பிரச்சனையை தீர்த்து வைக்க லஞ்சம் பெற்றதாக அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 24 … Read more

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது!

கடனுக்கான வட்டி விகிதத்தைப் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புள்ளி இரண்டு விழுக்காடு முதல், கால் விழுக்காடு வரை உயர்த்தியுள்ளது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முதன்முறையாகக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ஓராண்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7 புள்ளி ஒன்பது ஐந்து விழுக்காட்டில் இருந்து 8புள்ளி ஒன்று ஐந்து விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுக் கடனுக்கான வட்டி விகிதம் எட்டு புள்ளி பூச்சியம் ஐந்து விழுக்காட்டில் இருந்து எட்டேகால் … Read more

அமலாக்கத்துறை அதிரடி !நீரவ் மோடியின் உறவினர் சொத்துகள் முடக்கம்……….

அமலாக்கத்துறை நீரவ் மோடியின் தாய்மாமன் மெகுல் சோக்சிக்குச் சொந்தமான ஆயிரத்து 217கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை  பறிமுதல் செய்துள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கியில் உத்தரவாதக் கடிதம் பெற்றுப் பல்வேறு வங்கிகளில் 11ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் கடன்பெற்று மோசடி செய்த வைர வணிகர்களான நீரவ் மோடி, அவர் தாய்மாமன் மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டில் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்குச் சொந்தமான வீடுகளிலும், நிறுவனங்களிலும் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள், தங்க … Read more

புல்லட் ரயிலுக்கான நிலம் தயார்!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மும்பையில் இருந்து அகமதாபாத் வரை தொடங்க உள்ள புல்லட் ரயிலுக்கான  நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார். மகாராஷ்ட்ரா அரசு இந்த நிலத்தை ஹைஸ்பீட் ரயில்வே கார்பரேசன்  நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே பல திட்டங்கள் விரைவாக நிறைவேறி வருவதாகவும் டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் தெரிவித்தார். கடந்த ஆட்சிக்காலங்களில் தொடங்கப்பட்ட சில திட்டங்கள் 25 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டையும் அவர் சுட்டிக்காட்டினார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்த … Read more