இந்தியாவிற்கு உதவ அமெரிக்கா மறுப்பு ?

அமெரிக்காவில் நீரவ் மோடி இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த இயலாது என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

பஞ்சாப் நேசனல் வங்கி மூலம் முறைகேடாக கடன் உத்தரவாதப் பத்திரங்களைப் பெற்று, 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் மோசடி செய்த வழக்கில், வைரநகைத் தொழிலதிபர் நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல்சோக்சி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் பெரிதாக உருவெடுப்பதற்கு முன்னரே, வெளிநாடு சென்றுவிட்ட நீரவ் மோடி, நியூயார்க்கில் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில், நீரவ் மோடி அமெரிக்காவில் இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து தெரியும் என்றாலும், அதை உறுதிப்படுத்த முடியாது என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

நீரவ் மோடியை கண்டுபிடிக்க இந்திய அரசுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை உதவி செய்யுமா என்ற கேள்விக்கு, இதுதொடர்பாக அமெரிக்க நீதித்துறையை அணுகிக் கேட்குமாறு அந்த செய்தித்தொடர்பாளர் பதிலளித்துள்ளார். ஆனால் இதுகுறித்து அமெரிக்க நீதித்துறை பதிலளிக்க மறுத்துவிட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment