தவறுதலாக வங்கியில் விழுந்த 1.28 கோடி! தரமறுத்த நபருக்கு சிறை.!

துபாயில் இந்தியர் ஒருவரின் வங்கிக்கணக்கில் தவறுதலாக விழுந்த ரூ.1.28 கோடியை திருப்பித்தர மறுத்தவருக்கு சிறை தண்டனை. ஐக்கிய அரபு அமீரகத்தில், மருத்துவ வர்த்தக நிறுவனம் தவறுதலாக இந்தியர் ஒருவரின் வங்கிக்கணக்கில் அக்டோபர் 2021 இல் AED 570,000 திர்ஹம் (இந்திய மதிப்பில் ரூ.1.28 கோடி) அனுப்பியுள்ளது. இந்த பணத்தை திருப்பி தர மறுத்ததால் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. துபாய் குற்றவியல் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பின்படி, அடையாளம் தெரியாத அந்த நபர், அதே தொகையை அபராதமாக … Read more

#BREAKING: துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா!

மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது சென்னை வந்த 2 பேருக்கு பாதிப்பு. துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது சென்னை வந்த 2 பேருக்கு பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட இருவரும் … Read more

கொல்கத்தா விமான நிலையத்தில் 2 வெளிநாட்டவருக்கு கொரோனா பாசிட்டிவ்!

கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கிய இரு வெளிநாட்டவருக்கு கொரோனா பாசிட்டிவ், சோதனையில் உறுதி செய்யப்பட்டது. சீனாவில் தற்போது மீண்டும் பெருகிவரும் கொரோனா நோய்த்தொற்றால் இந்தியாவில் அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கையாளப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், டிச-24 இல் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலிருந்து வந்த இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் முதல் அதிநவின ரோபோட் காபி ஷாப்! துபாயில் திறப்பு.!

மனிதர்கள் இல்லாமல் இயங்கும் உலகின் முதல் சூப்பர் மாடல் ரோபோட் காபி ஷாப், துபாயில் திறக்கப்படுகிறது. நாளுக்கு நாள் உலகில் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேளையில் மனிதர்களின் தேவையே இனி தேவைப்படாது என்பது போல் பல அற்புத நிகழ்வுகள் அங்கங்கு நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. அந்தவகையில் உலகின் முதல் சூப்பர் மாடல் ரோபோட் காபி ஷாப், துபாயில் டோனா சைபர்-கஃபேவால் திறக்கப்பட இருக்கிறது. மனிதர்களே இல்லாமல் இயங்கும் இந்த காபி ஷாப், உலகிலேயே முதன் முறையாக திறக்கப்படும் … Read more

67 மாணவர்கள், 5 ஆசிரியர்கள்! கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் துபாய்க்கு கல்வி சுற்றுலா செல்லும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள். பள்ளி அளவில் கல்வி, மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் உள்ளிட்ட இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய, மாநில அளவிலும் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 68 பேரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் … Read more

வானில் பறக்கும் நஷ்ரியா… உடன் பறக்கும் அந்த நபர் யார்.? வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்த நஸ்ரியா, கடந்த 2014ஆம் ஆண்டில் பகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சற்று விலகிவிட்டார் என்றே கூறலாம். பிறகு நடிகர் நானிக்கு ஜோடியாக அண்டே சுந்தரலிங்கி என்ற தெலுங்கு படம் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுத்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுவிட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நஸ்ரியா தான் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இதனால் ரசிகர்களும் அவருடைய அடுத்த படத்தின் … Read more

துபாயில் ஆடம்பர வசதிகளுடன் ‘நிலவு’ வடிவிலான ரிசார்ட்!!

மனித கற்பனையின் வரம்புகளைத் தள்ளி, கனடிய கட்டிடக்கலை நிறுவனமான மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் இன்க். துபாயில் 5 பில்லியன் டாலர் மதிப்பில் நிலவின் வடிவிலான ரிசார்ட் ஒன்றை உருவாக்கி வருகிறது. மூன் துபாய், நிலவு வடிவ ரிசார்ட் 48 மாதங்களில் கட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக 735 அடி (224 மீட்டர்) உயரத்தைக் கொண்டிருக்கும். இது சந்திரனின் மேற்பரப்பில் இருப்பது போன்ற உணர்வைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன் துபாய்க்கு வருகை தரும் விருந்தினர்கள், ஸ்பா மற்றும் … Read more

மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக ‘புர்ஜ் கலிஃபாவில்’ லேசர் ஷோ!

உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கும் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாகவும்,மண் அழிவை தடுக்க உலகின் கவனத்தை ஈர்க்கவும் (ஜூலை 5-ம் தேதி) சிறப்பு லேசர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 2 நிமிட லேசர் ஷோவில் மண் அழிவு குறித்தும் அதை உடனே சரி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் சத்குரு பேசியுள்ள செய்தி மற்றும் அவருடைய 100 நாள் மோட்டார் சைக்கிள் பயண காட்சிகள்,மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சர்வதேச … Read more

எரிபொருள் கசிவு.. டெல்லி விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்… பதறிய பயணிகள்.!

டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தான் கராச்சியில் தரையிறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் இருந்து எஸ்.ஜி.11 எனும் விமானம் இன்று புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தில் இண்டிகேட்டர் சரியாக வேலை செய்யவில்லையாம். அதாவது, எரிபொருள் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை குறிக்கும் கருவி சரியாக வேலை செய்யாத காரணத்தால் எரிபொருள் வேகமாக குறைந்து கொண்டே வருவது போல தெரிந்துள்ளளது. இதனை அறிந்த விமானி உடனடியாக … Read more

IIFA 2022: விழாவிற்கு ஸ்டைலாக வந்திறங்கிய பாலிவுட் பிரபலங்கள்.!

சர்வதே இந்திய திரைப்படக் குழு (IIFA – International Indian Film Academy) சார்பில் பிரம்மாண்டமான IIFA திரைப்பட விழா வரும் ஜூன் 2 முதல் 4-ம் தேதி வரை அபுதாபியில் நடைபெறவுள்ளது. இந்தியன் சினிமாவின் மிகப்பெரிய விழா என்று போற்றப்படும் இந்த நிகழ்ச்சியில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவிற்கு பாலிவுட் பிரபலன்களான சல்மான் கான், ஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்,அனன்யா பாண்டே,ஜெனிலியா,திஷா பதானி,சாரா அலி கான், நேஹா கக்கர், பாக்சி, அஸீஸ் … Read more