அதிமுக துருபிடித்த விவாதத்தை வைத்து குழப்பத்தை உண்டாக்க முடியாது”சு.திருநாவுக்கரசர்..!!

சென்னை, செப்.23- தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்குள் அ.தி.மு.க. வால் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்த முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை வருமாறு:- தமிழகத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு நாளுக்குநாள் அதிகரித்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் தி.மு.க., காங் கிரஸைக் கண்டித்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் 25-ஆம் தேதி பொதுக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் … Read more

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் புதிய திட்டத்தை ட்விட்டரில் விமர்சித்த திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின்…!!

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை காலந்தாழ்த்தி தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு,தற்போது புதிதாக ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு காவிரிப்படுகை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் அனுமதியளிக்க முன்வந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டையும், தமிழக  விவசாயிகளையும் வாட்டி வதைக்கும் இந்த எதிர்மறைப் போக்கை மத்திய அரசு உடனே கைவிட வேண்டுமென்றும், இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டைப் பாலைவனமாக்க முயற்சித்தால் மீண்டும் ஒரு போராட்டக் களத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன் என அவர் … Read more

மு.க. ஸ்டாலின் நாட்டுப்பண் உச்சரித்ததை நாட்டுப்புற பாட்டு என்னும் தவறான பொருளில் ஒளிபரப்பியமைக்காக தனியார் செய்தி நிறுவனம் வருத்தம்…!!

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் நடந்த திருமண விழாவில் பேசும்போது தேசிய கீதத்தை தமிழில் நாட்டுப்பண் என்று அவர் உச்சரித்ததை நாட்டுப்புற பாட்டு என்னும் தவறான பொருளில் ஒளிபரப்பியமைக்காக நியூஸ்18 தமிழ்நாடு வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. https://twitter.com/News18TamilNadu/status/957489169344864256 திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், சிதம்பரத்தில் நடந்த திருமண விழாவில் நாட்டுப்பண் என்று உச்சரித்ததை தவறான பொருளில் ஒளிபரப்பியமைக்காக நியூஸ்18 தமிழ்நாடு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது… … Read more

அரசியல் களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்

நடிகர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அரசியல் பிரமுகரின் குடும்ப வாரிசு என்பது அனைவருக்கும் தெரியும். இதுவரை நடிகராக மட்டும் இருந்துவந்த அவர், சமீப காலமாக அரசியல் கருத்துக்களை நேரடியாகவே தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இன்று ஸ்டாலின் தலைமையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட உதயநிதி “மேடையில் இருப்பதை விட மக்களுடன் இருக்கவே விரும்புகிறேன். இனி என்னை அடிக்கடி மேடையில் திமுக தொண்டர்கள் பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாநகராட்சி அருகே 23 தொழிற்சங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடனும் அதிமுக கொடியுடனும் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…!!

தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தமிழக போக்குவரத்துத்துறை தங்களுக்கு கொடுக்கிற ஊதியத்தை உயர்திகொடுக்க வேண்டும், அதேபோல தங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர் தமிழக போக்குவரத்து ஊழியர்கள். இந்நிலையில் இன்று தமிழக அரசை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி அருகே 23 தொழிற்சங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிமுக கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.