Breaking:ஆம் ஆத்மி கட்சி – அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு..!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக(National Convenor) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக (National Convenor) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல,கட்சியின் செயலாளராக பங்கஜ் குப்தா மற்றும் பொருளாளராக என்.டி.குப்தா மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் பொற்கோயிலில் பிரார்த்தனை செய்த டெல்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவால்..!

பஞ்சாப் பொற்கோவிலில் பிரார்த்தனை செய்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பஞ்சாப் சென்றுள்ளார். அங்கிருக்கும் புகழ்பெற்ற அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 177 தொகுதிகளை உடைய பஞ்சாபில்  காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி போன்ற பல கட்சிகள் போட்டியிட உள்ளன. இந்நிலையில் டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபில் ஆம் ஆத்மி … Read more

கொரோனா இரண்டாம் அலையை விட மூன்றாம் அலை உக்கிரமாக இருக்கும் – டெல்லி முதல்வர்!

டெல்லியில் கொரோனாவின் இரண்டாம் அலை மிக அதிகளவிலான உயிரிழப்புகளை பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா இரண்டாம் அலையை விட மூன்றாம் அலை உக்கிரமாக இருக்கலாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மிக அதிகளவில் பரவியதுடன், அதிகப்படியான பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா இரண்டாம் அலையால் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் விரைவில் வரவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதுடன் … Read more

சீனாவிலிருந்து டெல்லிக்கு 6000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி – கெஜ்ரிவால்

கொரோனா 3 வது அலையை சமாளிக்க டெல்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6000 சிலிண்டர்கள் இறக்குமதி. டெல்லியில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக உச்சத்தை எட்டிவந்த நிலையில், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் டெல்லி அரசின் பல்வேறு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளினால் தற்போது அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று மட்டும் 1,550 ஆக புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது,207 பேர் உயிரிழந்துள்ளனர்.இது மார்ச் மாதத்திற்கு … Read more

கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் – அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியா முழுவதும் கொரோனாவுக்கான தடுப்பூசி இன்று தொடக்கப்ட்டுள்ளது.அவசர கால அனுமதியாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் மற்றும்  புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.அதன் பின்பு பேசிய கெஜ்ரிவால் தடுப்பூசி தொடர்பான வதந்திகளுக்கு மக்கள் செவிசாய்க்க வேண்டாம் என்றும் “தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்,” என்று கூறினார்.  மேலும் எல்.என்.ஜே.பி … Read more

டீசல் மீதான வாட் வரி குறைப்பு.. லிட்டருக்கு ரூ.8 வரை குறைகிறது- முதல்வர்!

டெல்லியில் டீசல் மீதான வாட் வரி, 16.75 சதவீதமாக குறைப்பு. டெல்லியில் கடத்த சில தினங்களாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகரித்து காணப்பட்டது. இதன்காரணமாக அம்மாநில முதல்வர், டீசல் மீதான வாட் வரியை குறைத்து உத்தரவிட்டார். அதன்படி, டெல்லி அரசாங்கம் டீசல் மீதான வாட் வரி, 30 சதவிதத்திலிருந்து 16.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் டீசல் லிட்டருக்கு ரூ.8 விலை குறையும் எனவும், ஒரு லிட்டருக்கு ரூ. 82-க்கு விற்கப்பட்ட டீசல், இனி … Read more

கொரோனா நிவாரண பணிகள்.! 6 லட்சம் பேருக்கு மதியம் மற்றும் இரவு உணவளித்து வரும் டெல்லி அரசு.!

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைப்பு சாரா நிறுவனங்களில் வேலைபார்த்த தினக்கூலி தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் தலைநகர் டெல்லியில், சுமார் 6 லட்சம் பேருக்கு மதியம் மற்றும் இரவு உணவு அளித்து வருகிறது டெல்லி அரசு. 5,85,386 பேருக்கு மதிய உணவும், 5,79,162 பேருக்கு இரவு உணவும் வழங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனை 1,423 சென்டர்களில் இருந்து … Read more