#BREAKING : தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு…! எந்தெந்த நேரங்களில் தெரியுமா…?

தீபாவளி அன்று காலை 6-7 மணி வரையும், இரவு 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது தான்  மக்களுக்கு மகிழ்ச்சி. அந்த வகையில், தீபாவளி அன்று காலை 6-7 மணி வரையும், இரவு 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசுகளை வெடிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக சுற்றுசூழல் – காலநிலை மாற்றத்துறை அறிவித்துள்ளது. ஒலி மாசு ஏற்படுத்தும் சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் … Read more

இந்த தீபாவளியை ஆரோக்கியமானதாக கொண்டாடலாமே …!

Diwali

தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசும் பலகாரமும் தான். அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கோவிலுக்கு செல்வது ஒரு புறம் இருந்தாலும் நாள் முழுவதும் பட்டாசு வெடித்து பலகாரங்களை உண்பது தான் தீபாவளியின் சிறப்பம்சமாக இருந்து வருகிறது. ஆனால் அந்த ஒரு நாளை அனுபவிப்பதற்காக மற்ற நாட்களை சங்கடப்படுத்தி விடக்கூடாது. அதாவது, ஆரோக்கியமான உணவு கட்டுப்பாடுடன் இருக்கக்கூடிய நபர்கள் அனைவருமே தீபாவளி வந்துவிட்டாலே கட்டுப்பாடின்றி பலகாரங்களை உண்ண தொடங்கி விடுகின்றனர். இதனால் சிலர் நோய்வாய்ப்பட … Read more

பட்டாசு விபத்து: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்..!

கள்ளக்குறிச்சியில்  ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் கடையின் மாடியில் தீபாவளி விற்பனைக்காக, சேகரித்து வைத்திருந்த பட்டாசுகள் நேற்று இரவு 7 மணி அளவில் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகில் இருந்த பேக்கரியில் 2 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஊழியர்கள் மற்றும் கடை அருகே பூ விற்றுக் கொண்டிருந்தவர் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். … Read more

தடை செய்யப்பட்ட பட்டாசுகளை ஏன் தயாரிக்கிறீர்கள்? – உச்சநீதிமன்றம் கேள்வி!

உச்சநீதிமன்ற தடையை மீறி தயாரிக்கப்படும் பட்டாசுகள் தான் வெடிக்கப்படுகின்றனவா என நீதிபதிகள் கேள்வி. தடை செய்யப்பட்ட பட்டாசு ரகங்களை எதற்காக தயாரிக்கிறீர்கள் என்று பட்டாசு ஆலைகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பெரிய சரவெடிகள் தடை செய்யப்பட்டும் அவை வெடிக்கப்படுவதை பார்க்கிறோம் என்றும் அரசியல் கட்சிகளின் வெற்றி கூட்டங்கள், திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் மத நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கின்றன எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உச்சநீதிமன்ற தடையை மீறி தயாரிக்கப்படும் பட்டாசுகள் தான் வெடிக்கப்படுகின்றனவா என்பதை விளக்க வேண்டும் … Read more

அம்பானி வீட்டின் முன் வெடிபொருளுடன் நின்ற சொகுசு வாகனம்…! போலீசார் விசாரணை…!

பிரபல தொழில் அதிபரான அம்பானி, வீட்டின் முன்பு, சந்தேகத்துக்கு இடமான முறையில், வெடிபொருட்களுடன் சொகுசு வாகனம் ஒன்று நின்றுள்ளது. பிரபல தொழில் அதிபரான அம்பானி, உலகில் உள்ள டாப் பணக்காரர்களில் ஒருவர்  ஆவார். இவருக்கு மும்பையில், ‘அண்டிலியா’ என்ற பெயருடன் பிரபல சொகுசு பங்காளா உள்ளது. இந்நிலையில், இவரது வீட்டின் முன்பு, சந்தேகத்துக்கு இடமான முறையில், வெடிபொருட்களுடன் சொகுசு வாகனம் ஒன்று நின்றுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல்துறையினர் தீவிர சோதனையில் … Read more

சென்னையில் விதிமீறி பட்டாசு வெடித்த 348 பேர் மீது வழக்கு பதிவு.!

தீபாவளிக்கு விதிமீறி பட்டாசு வெடித்ததால் 348 பேர் மீது சென்னையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி திருநாள் நேற்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தீபாவளி என்றாலே பட்டாசு தான் ஞாபாகத்துக்கு வரும், ஆனால் மாசு கட்டுப்பாடு மற்றும் கொரோனா ஊரடங்கை காரணமாக வைத்து பல மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் பட்டாசுகளுக்கு அனுமதி கொடுத்திருந்தாலும், நேரக்கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசின் கட்டுப்பாட்டுக்கும் விதிமுறைகளுக்கு மதிப்பளிக்காமல் நேற்று பட்டாசு வெடித்த பலர் மீது … Read more

பட்டாசு வெடிக்க தடை! ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் தேக்கம்!

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால், ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் தேக்கம். இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான். ஆனால், இந்த வருடம் பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான், ஒடிசா, அரியானா, டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால், ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் … Read more

தீபாவளி பட்டாசு விபத்து! சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ள சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை!

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தீபாவளி கொண்டாட தயாராகி வருகிறனர். பொதுவாக திருவிழாக்கள் என்றாலே, நமது நினைவுக்கு வருவது பட்டாசுகளும், புத்தாடைகளும் தான். பட்டாசுகள் இல்லாமல் எந்த விழாவும் கொண்டாடப்படுவதில்லை. இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தில், வெடி வெடிக்கும் போது எதிர்பாராமல் வெடி விபத்துக்கள் ஏற்படுவதுண்டு. இந்த விபத்தால் பாதிக்கப்படுவோருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காக, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டுள்ளது. … Read more

பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்! எதற்காக தெரியுமா?

பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள். நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள பெரம்பூர் கிராமம் எப்போதுமே பசுமையாக காணப்படுகிறது. இயற்கை எழில் நிறைந்த, இந்த கிராமத்தில், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் கூட்டமாக வந்து தங்குவது வழக்கம். பெரம்பூரில் உள்ள கிராமங்களில் உள்ள மரங்களில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வேப்பமரம், வேங்கை மரம், ஆலமரம் மாமரங்களில் கூடு அமைத்து வாழ்ந்து வருகிறது. இந்நிலையில், இங்கு … Read more

தமிழ்நாட்டுக்கும் இத்தகைய கட்டுப்பாடுகள் தேவை! – ராமதாஸ்

தமிழ்நாட்டுக்கும் இத்தகைய கட்டுப்பாடுகள் தேவைப்படுகிறது.  பண்டிகை காலங்கள் என்றாலே, நாம் வெடி இல்லாமல் கொண்டாடுவதில்லை. இந்த வெடியால் பல தீமைகள் ஏற்படும் என்றாலும், வெடி இல்லாத ஒரு பண்டிகையை, நாம் விரும்புவதில்லை. ஒவ்வொரு பண்டிகை நாட்களின் போதும், இந்த வெடியால் உயிரிழப்புகள் ஏற்படுவதுண்டு. இருந்தாலும், ஆவாரை நாம் தவிர்ப்பதற்கு நம் மனது தயங்க தான் செய்கிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் வெடி வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் … Read more