அம்பானி வீட்டின் முன் வெடிபொருளுடன் நின்ற சொகுசு வாகனம்…! போலீசார் விசாரணை…!

பிரபல தொழில் அதிபரான அம்பானி, வீட்டின் முன்பு, சந்தேகத்துக்கு இடமான முறையில், வெடிபொருட்களுடன் சொகுசு வாகனம் ஒன்று நின்றுள்ளது.

பிரபல தொழில் அதிபரான அம்பானி, உலகில் உள்ள டாப் பணக்காரர்களில் ஒருவர்  ஆவார். இவருக்கு மும்பையில், ‘அண்டிலியா’ என்ற பெயருடன் பிரபல சொகுசு பங்காளா உள்ளது.

இந்நிலையில், இவரது வீட்டின் முன்பு, சந்தேகத்துக்கு இடமான முறையில், வெடிபொருட்களுடன் சொகுசு வாகனம் ஒன்று நின்றுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.