#BREAKING : தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு…! எந்தெந்த நேரங்களில் தெரியுமா…?

தீபாவளி அன்று காலை 6-7 மணி வரையும், இரவு 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது தான்  மக்களுக்கு மகிழ்ச்சி. அந்த வகையில், தீபாவளி அன்று காலை 6-7 மணி வரையும், இரவு 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசுகளை வெடிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக சுற்றுசூழல் – காலநிலை மாற்றத்துறை அறிவித்துள்ளது.

ஒலி மாசு ஏற்படுத்தும் சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், மருத்துவமனை , பள்ளி, நீதிமன்றம், வழிபாட்டு தலங்கள் அருகில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும், குடிசை பகுதிகள், எளிதில் தீ பிடிக்க வாய்ப்புள்ள இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.