திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் காலில் விழுந்து ஆசி பெற்றார் முதலமைச்சர் பிப்லப் தேப்!

பிபலப் தேப் திரிபுராவின் முதலமைச்சராக (பதவியேற்றுக் கொண்ட)  பதவியேற்றதைத் தொடர்ந்து அங்குள்ள சத்சங்க ஆசிரமத்திற்கு நேரில் சென்றார். முன்னதாக பதவியேற்புவிழாவில் தமது எதிர்க்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மாணிக் சர்க்காரின் கால்களில் விழுந்து அவர் ஆசி பெற்றார். அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மாணிக் சர்க்காரின் ஆலோசனைகளுடன் அரசை நடத்த முடியும் என்று திரிபுரா பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியையும், மனவேதனையும் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார். பகுத்தறியும் பண்பான இளம் தலைமுறையால் தமிழகம் தலை நிமிர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தம்மை வணங்கிய அத்வானியைக் கண்டு கொள்ளாமல் சென்றதால் சர்ச்சை!

பிரதமர் மோடி திரிபுராவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியின் போது, தம்மை வணங்கிய பாஜக மூத்த தலைவர் அத்வானியைக் கண்டு கொள்ளாமல்  கடந்து செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திரிபுராவில் பிப்லாப் குமார்தேப் (Biplab Kumar Deb) தலைமையிலான பாஜக அமைச்சரவையின் பதவியேற்பு விழா, அகர்தலாவில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மூத்த தலைவர் அத்வானி, 20 ஆண்டுகளாக திரிபுராவின் முதலமைச்சராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாணிக்சர்க்கார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பங்கேற்றனர். விழாமேடைக்கு வருகை தந்த … Read more

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு குடியேறினார் திரிபுரா முன்னால் முதலமைச்சர் மாணிக் சர்க்கார்!

20 ஆண்டுகள் திரிபுராவில் முதலமைச்சராக ஆட்சி செய்த மாணிக் சர்க்கார், தற்போது கட்சி அலுவலகத்தில் ஒரே ஒரு அறை கொண்ட பகுதியில் மனைவியுடன் குடியேறியுள்ளார். பா.ஜ.க. வெற்றி பெற்றதும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய மாணிக் சர்க்கார் மறுநாளே அரசு வீட்டில் இருந்து தங்களது உடைகள் மற்றும் புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யாவுடன் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று  குடியேறினார். இந்தியாவிலேயே ஏழ்மையான முதலமைச்சர் என அறியப்படும் … Read more

தூத்துக்குடியில் ஹெச்.ராஜா படத்தை எரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வழக்கு பதிவு!

திரிபுராவில் மாமேதை லெனின்,அதேபோல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை,உத்தரபிரதேசத்தில்  மவானா பகுதியில் அம்பேத்கரின் சிலையை அகற்றி சேதப்படுத்திய பிஜேபி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதும் ,மேலும் இது குறித்து பாஜகவின்  தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கடந்த 7ஆம் தேதி  தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட்  (மார்க்சிஸ்ட்)  கட்சியின் சார்பில்  ஆர்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட்  (மார்க்சிஸ்ட்)  கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் தலைமயில் அனைத்து கட்சி சார்பில்   பாஜகவின்  தேசிய … Read more

தூத்துக்குடியில் லெனின்,பெரியார்,அம்பேத்கார் சிலை உடைப்புக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட்  (மார்க்சிஸ்ட்)  கட்சி தலைமயில் ஆர்பாட்டம்!

திரிபுராவில் மாமேதை லெனின்,அதேபோல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை,உத்தரபிரதேசத்தில்  மவானா பகுதியில் அம்பேத்கரின் சிலையை அகற்றி சேதப்படுத்திய பிஜேபி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதும் ,மேலும் இது குறித்து பாஜகவின்  தேசிய செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட்  (மார்க்சிஸ்ட்)  கட்சியின் சார்பில்  ஆர்பாட்டம்.     தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட்  (மார்க்சிஸ்ட்)  கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் தலைமயில் அனைத்து கட்சி சார்பில்   பாஜகவின்  தேசிய செயலாளர் எச்.ராஜாவை குண்டர் … Read more

திரிபுராவில் லெனின் சிலைகளை இடித்து அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திரிபுராவில் லெனின் சிலைகளை பாரதிய ஜனதா கட்சியினர் இடித்து அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து,  போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் பேரணியாக சென்ற அக்கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியனர் மற்றும் மோடிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். திடீரென அவர்கள் மோடியின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி ஆர்பாட்ட்ததில் ஈடுபட்டனர். திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது ஜனநாயக விரோத நடவடிக்கை என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பாரதிய ஜனதா நாட்டில் பாசிசத்தை … Read more

புதிய திருப்பம்? பா.ஜ.க. கூட்டணி மூன்று மாநிலங்களிலும் ஆட்சி…..

பா.ஜ.க. கூட்டணி ஆட்சி திரிபுரா, நாகலாந்து ஆகிய மாநிலங்களை தொடர்ந்து புதிய திருப்பமாக மேகாலயாவிலும் அமைக்கிறது. மேகாலயாவில் 59 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களையும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களையும் கைப்பற்றின. யூடிபி (UDP) உள்ளிட்ட இதர கட்சிகள் 17 இடங்களில் வெற்றி பெற்று இருந்தன. ஆட்சியமைக்க 30 இடங்கள் தேவை என்ற நிலையில், தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஒருபுறம் அங்கு ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் போராடி வந்த நிலையில், … Read more

திரிபுராவில் பிஜேபி கூட்டணி வெற்றி; சிபிஎம் அலுவலங்கள் மற்றும் தொண்டர்கள் மீது தாக்குதல்…!!

வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் நேற்று வெளியாயின. இதில் கடந்த 25 ஆண்டுகள் ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களை கைபற்றியது( வாக்கு சதவிகிதம்-45%). ஆனால் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஐபிஎப்டி(IPFT) கட்சியும் 43 இடங்களை கைப்பற்றியது. கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட பிடிக்காத பிஜேபி, இந்த தேர்தலில் சுமார் 35 இடங்களை கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் … Read more

ஊழலற்ற தலைவர் எனப்பெயர் பெற்ற மாணிக் சர்க்கார் பதவி விலகினார்!

திரிபுராவில் முதலமைச்சராக இருந்த மாணிக் சர்க்கார், தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் நிலையில், பதவி விலகினார். நடந்து முடிந்த திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் ஐபிஎப்டி(IPFT) கட்சியுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க போட்டியிட்டது. இதில் பா.ஜ.க. மட்டும் தனியாக 35 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 16 இடங்கள் மட்டுமே கிடைத்தது. 25 ஆண்டுகள் இடதுசாரிகள் வசம் இருந்த திரிபுராவை பா.ஜ.க. தற்போது கைப்பற்றியுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சராக இருந்த மாணிக் சர்க்கார், தலைநகர் அகர்தலாவில் … Read more